ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 1 டிசம்பர் 2017

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

அதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர்

ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்தது தவறு என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

ஆனால், இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள "சிறப்பு உறவை" சுட்டிக்காட்டிய தெரீசா, இது தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் தேடும் பணி நிறுத்தம்

படத்தின் காப்புரிமை Reuters

44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன தனது நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை நிறுத்திவிட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது.

சிரியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள அமெரிக்க கடற்படையினர்

படத்தின் காப்புரிமை US MARINE CORPS/SGT MATTHEW CALLAHAN

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்பிலிருந்து ராக்காவை கைப்பற்றுவதற்கு உதவ அனுப்பப்பட்ட 400 அமெரிக்க கடற்படையினர் தங்கள் நாட்டுக்கு திரும்ப உள்ளனர்.

சிரிய ஜனநாயக அமைப்பு கடந்த மாதம் ரக்காவை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தையடுத்து, அவர்கள் சிரியாவை விட்டு அமெரிக்காவுக்கு செல்ல உள்ளனர்

ஜெர்மனியில் நிலையான அரசை அமைக்க முக்கிய பேச்சுவார்த்தை

படத்தின் காப்புரிமை AFP

ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் மற்றும் முன்னாள் மைய-இடதுசாரி அமைப்பு கட்சிகளும் முக்கிய கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :