ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பாட்ஸ்டாம் சந்தையில் எடுக்கப்பட்ட வெடிபொருள்: ஜெர்மனி காலவ்துறை விசாரணை

படத்தின் காப்புரிமை EPA

பெர்லின் அருகிலுள்ள பாட்ஸ்டாம் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட வெடி பொருள் ஒன்றினை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாட்ஸ்டம் சந்தையிலிருந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஓர் உலோக குழாயில், சந்தேகத்திற்குரிய வகையிலான தூளையும், அதனுடன் பல நூறு கிராம் ஆணிகளையும் கண்டறிந்துள்ளதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் கிருஸ்துமஸ் சந்தைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கி: தங்கவர்த்தகரின் சொத்துகளை முடக்க உத்தரவு

படத்தின் காப்புரிமை AFP

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எண்ணெய்க்கு தங்கம் திட்டத்தில் ஈடுபடுவதாக கூறிய தங்க வர்த்தகரின் சொத்துக்களை கைப்பற்றுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது என்று துருக்கி நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை இந்த திட்டம் மீறுகிறது.

இந்த வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ரிசா சாராப் என்பவர், துருக்கி வங்கியாளரான மெஹ்மெட் ஹகான் என்பவருக்கு எதிராக அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையில், இந்த திட்டத்தால் இரான் பல டாலர்கள் ஈட்டியுள்ளது. அந்த காலக்கப்பட்டத்தில், இத்திட்டத்தின் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது.

குடும்பங்களை பிரிக்கக்கூடாது: பிரிட்டன் செஞ்சிலுவைச் சங்கம்

படத்தின் காப்புரிமை PHILIPPE HUGUEN/AFP/Getty Images

பிரிட்டனின் செஞ்சிலுவை சங்கம், சிரியாவிலிருந்து வந்து இங்கிலாந்தில் தங்கியுள்ள அகதிகளை தங்களின் குடும்பத்திலுள்ள 18 வயதுக்கு அதிகமானவர்களை, போர் பகுதிகளிலிருந்து அழைத்து வருவதை அனுமதிக்குமாறு கோரியுள்ளது.

பிரிட்டனின் குடும்ப இணைப்புத் திட்டம் 18 வயதுக்கு அதிகமானவர்களை, பெரியவர்கள் என்று வகைப்படுத்தி அவர்களை அகதிகள் குடும்பத்தினர் அழைத்துவருவதை ஏற்பு அளிக்கவில்லை. ஆனால், செஞ்சிலுவை சங்கமோ, போருக்கு நடுவே நாடுகளைவிட்டு வெளியேறும் குடும்பங்கள் பிரிக்கப்படக்கூடாது என்றும், 25 வயது வரை உள்ளவர்களை குடும்பத்துடன் இணைந்திருக்க வைக்கும் வகையில், திட்டத்தின் விதிமுறைகளில் மாற்றம் வேண்டும் என்றும் கூறியுள்ளது.

டிரம்பின் புதிய அறிவிப்பிற்கு வாய்ப்பு

படத்தின் காப்புரிமை Drew Angerer/Getty Images

ஜெருசிலத்தை, இஸ்ரேலின் தலைநகரம் என அமெரிக்கா அங்கீகரிப்பதாக, அதிபர் டிரம்ப் அடுத்தவாரம் அறிவிக்கக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளும், ஜெருசலத்தை தங்களின் தலைநகரம் என கூறிவரும் நிலையில், இந்த அறிவிப்பு வந்தால், அங்கு நடக்கும் பிரச்சனையை மேலும், அதிகரிக்கவே இது வழி செய்யும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :