ஒரு வயது மகளுடன் தள்ளுவண்டியில் 1,800 கி.மீ பயணித்த சாகச தம்பதி

சாகச தம்பதி படத்தின் காப்புரிமை JUSTIN AND LAUREN JONES

ஒரு தம்பதி தங்களது ஒரு வயது மகளுடன் ஆஸ்திரேலியாவில் 1,800 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்துள்ளனர்.

சிட்னியை சேர்ந்த ஜஸ்டின் ஜோன்ஸ் மற்றும் லாரன் ஜோன்ஸ் சமீபத்தில் தங்களது 102 நாள் பயணத்தை முடித்துள்ளனர்.

கை ரிக்‌ஷா போன்ற கையால் இழுக்கப்படும் வண்டியில் தங்களது மகளுடன் இந்த பயணத்தை முடித்துள்ளனர்.

''குடும்பத்துடன் சாகச வாழ்க்கை வாழ முடியும் என எங்களை நாங்களே நிரூபிக்கும் முயற்சியாக இதைச் செய்தோம்'' என்கிறார் ஜோன்ஸ்.

படத்தின் காப்புரிமை JUSTIN AND LAUREN JONES

ஜோன்ஸ் ஒரு அனுபவமிக்க பயணி. அண்டார்டிகாவில் மலையேற்றம் போன்ற பல சவால்மிக்க பயணங்களை இதற்கு முன்பு மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா முழுவதும் நடந்து பயணிக்க வேண்டும் என்ற தனது ஆசையை மகள் பிறந்தபிறகு கைவிட்டுவிட்டதாக ஜோன்ஸ் கூறுகிறார். குடும்பத்துடன் இதைச் செய்வது சாத்தியமில்லாதது என அவர் நினைத்தார். ஆனால் அவரது மனைவிக்கு மற்றொரு யோசனை இருந்தது.

படத்தின் காப்புரிமை copyrightJUSTIN AND LAUREN JONES

''குடும்பம் வந்தபிறகு சாகச வாழ்க்கை இருக்காது என கூறப்படுவதற்கு சவால் விடும் முயற்சியாக, நாம் ஏன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா முழுக்க பயணிக்க கூடாது என மனைவி லாரன் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது'' என்கிறார் ஜோன்ஸ்.

இக்குடும்பம் ஒவ்வொரு நாளும் 25 கிலோ மீட்டர் நடந்தது. பாலைவனத்திலும், செடிகள் நிறைந்த பகுதியிலும் நடப்பது போராட்டமாக இருந்தது என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை JUSTIN AND LAUREN JONES

ஜீரோ டிகிரியில் இருந்து 41 டிகிரி வரையிலான மாற்றுப்பட்ட தட்பவெப்பநிலையில் பயணித்துள்ளனர்.

உணவு, தண்ணீர், கூடாரம் போன்ற்றை தள்ளுவண்டியின் பின்புறத்தில் வைத்துவிட்டனர். 270 கிலோ எடை கொண்ட இப்பொருட்கள் இருக்கும் வண்டியை ஜோன்ஸ் இழுத்துச் செல்வார். மற்றொரு சிறிய தள்ளுவண்டியில் மகளை அமரவைத்து லாரன் இழுத்துச் செல்வார்.

படத்தின் காப்புரிமை JUSTIN AND LAUREN JONES

தங்களது பயணத்தில் மகளையும் அழைத்துச் சென்றது திருப்திகரமான ஒன்றாக ஜோன்ஸ் நினைக்கிறார்.

''எங்கள் மகளை வலுவான, இயற்கையை விரும்பும் ஒரு பெண்ணாக உருவாக்க விரும்புகிறோம். சிட்னியில் உள்ள எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் இதைச் செய்வது மிகவும் சிரமம்'' என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்