ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 4 டிசம்பர் 2017

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

தேடுதல் பணியை தொடர வலியுறுத்தல்

படத்தின் காப்புரிமை Reuters

காணாமல் போன அர்ஜண்டீனாவின் நீர்முழ்கியான சன் ஜுஹானில் பயணித்தவர்களின் குடும்பத்தினர், அந்நாட்டு அரசு, குழுவில் யாரேனும் உயிர்பிழைத்துள்ளார்களா என தேடும் பணியை கைவிட்டது குறித்து விமர்சித்துள்ளனர்.

நீர்மூழ்கியில் பயணித்த உறவினர்களின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி, மீண்டும் தேடுதல் பணி தொடர வேண்டுமென அவர்கள் கடற்படை அலுவலகத்தை நோக்கி பேரணியாக நடந்தனர்.

கடந்த வியாழக்கிழமை பேசிய கடற்படை அதிகாரிகள், நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் இதற்கு மேலும் உயிருடன் இருப்பார்கள் என்று நம்பிக்கை இல்லை என் தெரிவித்தனர்.

டுவிட்டர் பதிவுகள் மீது கவனம் வையுங்கள்: டிரம்பிற்கு அறிவுரை

படத்தின் காப்புரிமை Mark Wilson/Getty Images

அமெரிக்காவில் எஃப்.பி.ஐ, அதன் முன்னாள் இயக்குநர் மற்றும் கடந்த தேர்தலில் ரஷ்யாவில் தலையீடு, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தொடர்ந்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் கவலை அளிப்பதாக அந்நாட்டு முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதியை தடைசெய்யும் விதமாக டிரம்ப் நடப்பதுபோல இருக்கிறது என ஜனநாயகக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறும் சூழலில், லின்ஸ்லே கிரஹாம் என்ற குடியரசுக்கட்சியை சேர்ந்த பிரமூகரோ, போடப்படும் டுவிட்டர் பதிவுகள் மீது கவனம் செலுத்துங்கள் என டிரம்பிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

மைக்கில் ஃபிளின், ரஷ்யவுடன் வைத்திருந்த தொடர்பு குறித்து எஃப்.பி.ஐயிடம் பொய் கூறியது தனக்கு தெரியும் என்று பதிவிடப்பட்ட பதிவு, உண்மையில் டுவிட்டர் குறுஞ்செய்தியாக போடப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என அதிபரின் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.

ஜெரட் குஷ்னர் விளக்கம்

படத்தின் காப்புரிமை Drew Angerer/Getty Images

டிரம்பின் முக்கிய ஆலோசகரும், அவரின் மருமகனுமான ஜெரட் குஷ்னர், ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அங்கீகரிக்கிறது என்று அறிவிப்பது குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிபர் இதுகுறித்து பல்வேறு கோணங்களில் கவனித்து வருவதாகவும், அவ்வாறு அறிவிக்கப்பட்டால், அதை அதிபரே அறிவிப்பார் என்று கூறினார்.

தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிரைவேற்றும் வகையில், புதன்கிழமை டிரம்ப் இதை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏமன்: `போரை நிறுத்துங்கள்` - ஐ.நா பொதுமேலாளர்

படத்தின் காப்புரிமை Lukas Schulze/Getty Images

ஏமனில் சண்டையிட்டு வரும் குழுக்களை உடனடியாக சண்டையை நிறுத்துமாறு ஐ.நாவின் பொதுசெயலாளர் ஆண்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

அக்குழுக்கள் உடனடியாக பொருட்களை நாட்டினுள் இறக்குமதி செய்ய அனுமதிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

அதிக உணவும், மருந்துகள் ஏமனிற்குள் வரவில்லை என்றால், பசி மற்றும் நோய்களால், ஆண், பெண் என பலரும் இறக்க வேண்டிவரும் என கூறியுள்ளார்.

சௌதி தலைமையிலான கூட்டணி, ஏமனின் வடக்குப் பகுதிக்கு எந்தவிதமான உதவிகளும் சென்று சேராதவாறு தடைகளை வைத்துள்ளது.

குர்திஷ் வசமான டேர் அல்-ஜோரின் கிழக்குப்பகுதிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அமெரிக்கா தலைமையிலான கூட்டணிகள் மற்றும் ரஷ்ய வீரர்களின் உதவியோடு, டேர் அல்-ஜோர் நகரின் கிழக்குப் பகுதிகளை ஐ.எஸ் குழுவிடமிருந்து முழுமையாக கைப்பற்றிவிட்டோம் என சிரியாவின் குர்தீஷ் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க கூட்டணியும், ரஷ்யாவும், வான்வழி உதவிகள் செய்ததோடு, ஊருக்குள் சண்டையிடும் சூழலுக்கான அறிவுரைகளையும் வழங்கியதாக கூறியுள்ளது.

குர்திஸ் மற்றும் அரபு மக்களைக்கொண்ட, அரபு பழங்குடியினரின் உதவி, ஐ.எஸ் குழுவிற்கு இருந்தது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :