பிபிசி தமிழில் இன்று... மதியம் 1 மணி வரை...

பிபிசி தமிழில் இன்று மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஃப்கானிஸ்தான் அதிபர்

படத்தின் காப்புரிமை Getty Images

ஆஃப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக, ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மன்னிப்பு கேட்டுள்ளார்.

செய்தியை படிக்க: பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஃப்கானிஸ்தான் அதிபர்

''வட கொரிய தலைவர் கிம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறார்''- டிரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஹிச்ஆர் மெக்மாஸ்டர்

வட கொரியாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைத் தீர்க்க, அமெரிக்கா வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹிச்ஆர் மெக்மாஸ்டர் கூறியுள்ளார்.

செய்தியை படிக்க: ''வட கொரிய தலைவர் கிம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறார்''

'இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்': ஜோர்டன் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை AFP

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

செய்தியை படிக்க: 'இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்'

ஜெயலலிதா- கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதாவின் தொடக்கம் முதல் முடிவு வரை : முக்கிய காலகட்டங்கள்

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5-ம் தேதி வருகிறது. ஜெயலலிதா பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவர் கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள் இங்கே.

செய்தியை படிக்க: ஜெயலலிதா- கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள்

இளநரை, வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படலாம்

படத்தின் காப்புரிமை Getty Images

நாற்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் ஏற்பட உடல் பருமனைவிட ஆபத்து காரணியாக இருப்பது, இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் தான் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

செய்தியை படிக்க: இளநரை, வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படலாம்

உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள் பணி நீக்கம்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய தலைநகர் டெல்லியில், உயிரிழந்ததாக இறுதிச் சடங்குக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரோடிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தை இறந்து விட்டதாக அறிவித்த இரண்டு மருத்துவர்களை, மருத்துவமனை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

செய்தியை படிக்க: உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள் பணி நீக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :