ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டிரம்ப்பின் பயணத்தடைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம்

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பயணத்தடையின் சமீபத்திய வரைவை முழுமையாக செயல்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடல் வாழ்வை சீர்குலைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: ஐநா எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை AFP

அதிகளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ்வு சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திரங்களுக்கான தலைவர் எச்சரித்துள்ளார்.

ஏமன் தலைநகரில் விமான தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பித்தது

படத்தின் காப்புரிமை AFP

முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர், செளதி தலைமையிலான கூட்டணியின் விமான தாக்குதல்கள் ஏமனின் தலைநகரான சனாவில் மீண்டும் தொடங்கியுள்ளன.

இஸ்ரேல் தலைநகர் விவகாரத்தில் டிரம்ப்புக்கு மக்ரோங் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை AFP

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதை எதிர்த்தும், டெல் அவிவிலிருந்து அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றும் நோக்கில் செயல்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்ததாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.

வட கொரியாவிற்கு செல்கிறார் ஐநாவின் பிரதிநிதி

படத்தின் காப்புரிமை AFP/KCNA

ஐக்கிய நாடுகள் சபை தனது அரசியல் விவகாரங்கள் தலைவர் செவ்வாயன்று வடகொரியாவைப் பார்வையிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் பியோங்கியாங்கிற்கு ஐநா சார்பில் நடக்கும் பெரிய அளவிலான பயணமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :