ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஜெருசலேம் விவகாரம்: அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை EPA

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரித்துள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள ரஷ்யாவுக்கு தடை

படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷ்யாவிற்கு தடை விதித்துள்ளது.

டாப் 10 ட்வீட் பட்டியலை வெளியிட்ட ட்விட்டர் நிறுவனம்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட மற்றும் விருப்பம் தெரிவிக்கப்பட்ட ட்வீட் பதிவுகளின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் பத்து இடங்களில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ட்வீட்கள் இடம்பெற்றுள்ளன.

போலி செய்திகளை அடையாளம் காட்டும் பிபிசியின் புதிய திட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டனில் இளம் வயதினர் போலி செய்திகளை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு புதிய திட்டத்தை பிபிசி தொடங்க உள்ளது. இதன்மூலம், போலி அல்லது பொய் செய்திகளை அவர்களால் சுலபமாக கண்டறிய முடியும்.

ஜப்பான்: அடுத்தாண்டு சாலைகளில் சோதிக்கப்படவுள்ள நிஸான் தானியங்கி கார்கள்

படத்தின் காப்புரிமை Nissan

அடுத்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜப்பான் நாட்டு சாலைகளில் கார் உற்பத்தியாளர் நிஸான் அதனுடைய தானியங்கி கார்களை சோதித்து பார்க்க முடிவு செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :