இந்தியாவின் ஆளில்லா விமானம் தங்கள் வான்வெளியில் நொறுங்கி விழுந்ததாக சீனா குற்றச்சாட்டு

  • 7 டிசம்பர் 2017
ட்ரோன் படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption இந்திய ராணுவத்தின் ஆளில்லா விமானம் (கோப்புப் படம்)

சீன வான்வெளியில் இந்திய ஆளில்லா விமானம் ஒன்று "எல்லை மீறி நுழைந்து விபத்துக்குள்ளானதாக" அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

"சில நாட்களுக்கு முன்" இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வெஸ்டர்ன் தியேட்டர் எனப்படும் போர் பிரிவின் துணை இயக்குனர் ஜங் சுய்லி கூறினார். சரியாக எந்த இடத்தில் இது நிகழ்ந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

"சீனாவின் பிராந்திய இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக" சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான சின்ஹூவா குறிப்பிட்டுள்ளது.

தற்போது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டிற்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்த ஆளில்லா விமானம் குறித்து சீன எல்லைப்படை விசாரித்ததாக துணை இயக்குனர் ஜங் கூறியதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சம்பவம் குறித்து "அதிருப்தி அடைந்த சீனா, வலுவான எதிர்ப்பையும் பதிவு செய்ததாக" அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு சீனா "தன் நாட்டின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்பாட்டுடன் காப்பாற்றும்" எனவும் ஜிங் தெரிவித்தார்.

முன்னதாக, டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பான மோதலால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான உறவு மோசமடைந்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்