கத்தாருடன் 14 பில்லியன் டாலர் வர்த்தக உடன்படிக்கையில் பிரான்ஸ் கையெழுத்திட்டது

கத்தார் தலைவர் படத்தின் காப்புரிமை Carl Court

பதினான்கு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவ மற்றும் வர்த்தக உடன்படிக்கையில் கத்தாரும் பிரான்சும் கையெழுத்திட்டுள்ளன. சவூதி அரேபியா மற்றும் அதன் பிராந்திய கூட்டணி நாடுகள் கத்தார் மீது நிலம், கடல், வான் ஆகிய மூன்று வழிகளிலும் முற்றுகையிட்டுள்ளபோதும் பிரான்ஸை அது தடுத்து நிறுத்தவில்லை என்று காட்டுவதைப் போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கத்தார் மீது அந்நாடுகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் கத்தார் அதனை மறுக்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பை இந்த உடன்படிக்கைகள் அடிக்கோடிட்டு காட்டுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தோஹாவில் தெரிவித்தார். கத்தார் இன்னும் பனிரெண்டு ரஃபேல் போர் விமானங்கள், கிட்டத்தட்ட ஐநூறு கவச வாகனங்கள் மற்றும் ஐம்பது ஏர் பஸ் பயணிகள் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்கவுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்