ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட செனட்டர் பதவி விலகுகிறார்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தனது மனைவியுடன் அல் ஃபிரான்கன்

பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமெரிக்காவின் ஜனநாயக கட்சி செனட்டரான அல் ஃபிரான்கன், வரும் வாரங்களில் தான்பதவி விலக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அல் ஃபிரான்கன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்று 30 ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் வரை அழைப்பு விடுத்தனர்.

இஸ்ரேல்- பாலத்தீனர்களுக்கு இடையே மோதல் அதிகரிப்பு

படத்தின் காப்புரிமை AFP

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அதிகரித்துள்ளது.

கலிஃபோர்னியா காட்டுத் தீ: மக்கள் வெளியேற்றம்

படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய காட்டுத் தீயை எதிர்த்துப் தீயணைப்பு குழுவினர் போராடி வருவதற்கு மத்தியில், அங்கிருந்து கிட்டத்தட்ட 2 லட்சம் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீ வெகு வேகமாகப் பரவி வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

"தூய்மையற்றவர்கள்" என உறவினர்களை கொல்ல முயற்சி

படத்தின் காப்புரிமை Image copyrightTHINKSTOCK; SCIENCE PHOTO LIBRARY

"தூய்மையற்றவர்கள்" என்று தனது குடும்ப உறுப்பினர்களைக் கொல்வதற்கு எலி விஷத்தை பயன்படுத்திய ஒரு மனிதரை இத்தாலியக் காவல்துறையினர் கைது செய்தனர்.

27 வயதாகும் மாட்டியா டெல் ஜோட்டோ என்ற அந்த நபர், அவரது தந்தை வழி தாத்தா, பாட்டி மற்றும் அத்தை ஆகியோர் உண்ட உணவில் நச்சு ரசாயனமான தாலியத்தை கலந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்