டோக்கியோ: ஆலயத்தில் 'சாமுராய்' வாளால் மூவர் வெட்டி கொலை

ஷின்டோ வழிபாட்டு ஆலயம் படத்தின் காப்புரிமை Kyodo/Reuters

டோக்கியோவில் உள்ள ஷின்டோ வழிபாட்டு ஆலயத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதற்கு காரணம் தொடர் முன்பகையாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தனது காரிலிருந்து வெளியே வந்தபோது, தலைமை பெண் பாதிரியாரரான அவரது சகோதரியை, அந்த கொலையாளி கொலை செய்ததாக போலீஸ் தெரிவித்துள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் கூறுகிறது.

அந்த கொலையாளி தற்கொலை செய்து கொள்வதற்கு முன், பதுங்கியிருந்த மற்றொரு பெண்ணையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரத்தக் கரையுள்ள சாமுராய் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சாமுராய் வாள்(கோப்புப்படம்)

இத்தாக்குதலில், பெண் பாதிரியாரின் கார் ஓட்டுனர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

நீண்டகால பகை

பெண் பாதிரியாருக்கும், கொலை செய்த அவரது சகோதரரான ஷிகென்கா டொமியோகாவிற்கும் இருந்து வந்த நீண்டகால பகையே இந்தக் கொலைகளுக்கு காரணம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷின்டோ ஆலயத்தில், 1990-களில் தனது தந்தைக்கு பிறகு டொமியோகா தலைமை பாதிரியாராக இருந்து வந்ததாக ஜிஜி செய்தி நிறுவனம் கூறுகிறது. எனினும், 2001 ஆம் ஆண்டு இவர் பதவி நீக்கப்பட்டு மீண்டும் அவரது தந்தையே முக்கிய பாதிரியாராக பதவியேற்றார். அதனையடுத்து, தனது மகளை இரண்டாவது இடத்தில் அவர் பணியமற்தினார்.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக, கொலையாளி என்று கருதப்படும் டொமியோகா, அவரது சகோதரிக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதம் அனுப்பியதையடுத்து கடந்த 2006-ல் கைது செய்யப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு அவர்களது தந்தை ஓய்வு பெற்றதினால், சகோதரி டொமியோ தலைமை பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.

ஷின்டோ என்பது ஜப்பானின் உள்நாட்டில் சிலர் பின்பற்றக்கூடிய மதம். டொமியோகா ஹச்சிமங்கு ஆலயமானது 1627 ஆம் ஆண்டுக்கு முந்தையதாகும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் ஃபுக்காகவா ஹச்சிமன் என்ற கோடைக்கால திருவிழாவிற்கு இது புகழ் பெற்றதாகும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :