பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் உடன்பாடு

தெரீசா மே படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெரீசா மே

வருங்காலத்தில் பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் உறவுமுறை குறித்த பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து எல்லைகள் விவகாரம் குறித்து இரவு நடந்த பேச்சுவார்த்தையடுத்து, வெள்ளிக்கிழமை காலை பிரசல்ஸ் வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே.

கடுமையான எல்லை கோட்பாடுகள் இருக்காது என்று கூறிய பிரதமர், குட் ஃப்ரைடே ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதனால், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், "முன் வாழ்ந்தது போல தொடர்ந்து வாழலாம்".

"தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு சமரச நிலைதான்" என செய்தியாளர்களிடம் பேசிய கிளவுட் ஜங்கர் தெரிவித்தார்.

"பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் கடினமாக இருந்ததாக" அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையை எட்ட "இரு தரப்பிலும் பல கொடுக்கல் வாங்கல்கள் தேவைப்பட்டது" எனவும் தெரீசா மே கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்