ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

காட்டுத்தீ வருடாந்திர நிகழ்வாக மாறலாம்

படத்தின் காப்புரிமை EPA

கலிஃபோர்னியா காட்டுத்தீ ஏற்படுத்திய சேதங்களை பார்வையிட்ட கலிஃபோர்னியாவின் ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன், உலக வெப்பமயமாதல் காட்டுத்தீ போன்ற பேரழிவுகள் வருடாந்திர நிகழ்வாக மாறலாம் எனக் கூறியுள்ளார்.

''அமெரிக்கா மீது பொருளாதார தடை''

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேத்திற்கு அமெரிக்கா மாற்றுவதைத் தடுக்கும் விதமாக, அமெரிக்கா மீது பொருளாதார தடைகள் விதிப்பதை அரபு நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என லெபனான் வெளியுறவு அமைச்சர், கெப்ரான் பஸ்ஸில் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக இஸ்ரேலில் போராட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்ரேல் அரசு ஊழல் புரிந்ததாக கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.

ஜானி ஹேலிடேவிற்கு இறுதி அஞ்சலி

படத்தின் காப்புரிமை EPA

நுரையீரல் புற்றுநோயுடன் போராடிவந்து உயிரிழந்த பிரான்சின் ராக் இசை நட்சத்திர பாடகரான ஜானி ஹேலிடேவிற்கு, ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் வீதிகளில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :