ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இஸ்ரேல் - பாலத்தீனம் 'சமரச' முயற்சியை அமெரிக்கா தடுக்கிறது: ஐ.நா

படத்தின் காப்புரிமை Reuters

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவானது இஸ்ரேலுக்கும் பாலத்தீனதிற்கும் இடையே "சமரச" முயற்சிகள் மூலம் அமைதியை ஏற்படுத்துவதற்கான பணிக்கு அபாயமாக அமைந்துள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தொடங்கியது பிட்காயின் வர்த்தகம்

படத்தின் காப்புரிமை AFP

பிட்காயின் என்னும் மின்னணு நாணயத்தின் அடிப்படையிலான நிதி தயாரிப்புகள் அமெரிக்காவில் முதல் முறையாக தனது வர்த்தக தொடங்கியுள்ளன. பிட்காயின் அடிப்படையிலான வர்த்தகத்தை சிகாகோவில் மேற்கொள்வதற்கான அனுமதியை இம்மாதம் அந்நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்புகள் வழங்கின.

சோமாலியாவில் நடக்கும் 60% தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பே காரணம்

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இந்தாண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சோமாலியாவில் 4,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கடும்போக்கு இஸ்லாமிய குழுவான அல் ஷபாப்பால் 60 சதவீத பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், எஞ்சியவை சோமாலிய ராணுவம், ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் மற்றும் மற்ற ஆயுத குழுக்களால் நிகழ்த்தப்பட்டதென்றும் அது தெரிவித்துள்ளது.

கட்டுக்குள் அடங்காமல் எரிந்து வரும் கலிஃபோர்னிய காட்டுத்தீ

படத்தின் காப்புரிமை EPA

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் அடங்காமல் வடக்கு லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து எரிந்து வருகிறது. சென்ற வாரம் உருவாகி வேகமாக பரவி தற்போது கடற்கரை நகரமான சாண்டா பார்பராவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த பெரிய காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் நான்கு ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அங்குள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் அழித்துவிட்டன அல்லது சேதமடைந்துள்ளதுடன் இரண்டு லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :