சிரியாவிலிருந்து ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற புதின் ஆணை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption '' தீவிரவாதிகள் மீண்டும் தங்கள் வேலையை காட்டினால், அவர்கள் இதுவரை பார்த்திராத தாக்குதல்களை அவர்கள் மீது ரஷ்யா நடத்தும்'' என்றார் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், திங்களன்று சிரியாவில் தனது அறிவிக்கப்படாத பயணத்தின்போது, ரஷ்ய துருப்புகளின் ஒரு பகுதியினரை சிரியாவிலிருந்து திரும்பப் பெறும் உத்தரவை வெளியிட்டார்.

அதிபர் புதின், ஹிமேமீம் விமான தளத்திற்கு வந்தடைந்த சிரிய அதிபர் பஷர் அல்- அசாத்தைச் சந்தித்ததாக இன்டர்பாஃக்ஸ் செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மார்ச் 2016-இல் ரஷ்ய துருப்புக்களில் பெரும்பான்மையானவர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக புதின் அறிவித்திருந்தார்.

எகிப்து மற்றும் துருக்கியிலும் ரஷ்ய அதிபர் தனது பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

''தங்கள் நிரந்தர தளங்களில் இருந்து ரஷ்ய துருப்புகளை பின்வாங்கத் தொடங்குமாறு பாதுகாப்பு அமைச்சருக்கும் பொது ஊழியர்களின் தலைவருக்கும் ஆணையிடுகிறேன்'' என்று புதின் கூறியதாக RIA (ஆர்ஐஏ) நோவோஸ்டி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

''நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். சிரியாவில் வசிக்கும் ரஷ்ய துருப்புகளுள் பெரும்பான்மையானோர் ரஷ்யாவில் உள்ள தங்களது வீடுகளுக்குச் திரும்பவுள்ளனர்,'' என்றும் அவர் கூறினார்

''தீவிரவாதிகள் மீண்டும் தங்கள் வேலையை காட்டினால், அவர்கள் இதுவரை பார்த்திராத தாக்குதல்களை அவர்கள் மீது ரஷ்யா நடத்தும்'' என்றார் புதின்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்