ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டிரம்ப் மீது பாலியல் புகார்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மூன்று பெண்கள் கூறியிருந்த நிலையில், இந்நேரத்தில் இக்குற்றச்சாட்டை கூற வேண்டியது ஏன் எனவும், இதில் உள்ள அரசியல் உள்நோக்கம் என்ன எனவும் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.

''அமைதிக்கான வாய்ப்புகளை அழிக்கும்''

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அதிபர் டிரம்ப் அங்கீகரித்தது, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்கள் இடையிலான அமைதிக்கான வாய்ப்புகளை அழிக்கும் என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

தொடர் தாக்குதல்

படத்தின் காப்புரிமை Getty Images

காஸாவில் இருந்து பல ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டதை அடுத்து, காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்களை இலக்கு வைத்து வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

வெனிசுவேலா சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது: அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Getty Images

அதிபர் தேர்தலில் போட்டியிட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு தடை விதித்ததன் முலம், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துவதாக வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க வெளியுறத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :