பாதுகாப்பின்றி தவிக்கும் பாகிஸ்தானின் சிறுபான்மை ஹஜாராக்கள்!

ஷியா இஸ்லாம் மீதான நம்பிக்கைக்காக, பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் ஹஜாரா சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை, சமீபத்திய ஆண்டுகளில் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதையடுத்து ஹஜாராக்கள் வசிக்கும் இரண்டு மாவட்ட வாயில்களில், ராணுவ சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இது, சொந்த இடத்திலேயே கைதிகளாக்கப்பட்டுள்ள உணர்வை ஹஜராக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.