மியான்மர்: அலுவல் ரகசிய சட்டத்தின் கீழ் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

மியான்மர் ரணுவமும், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்ததாக வா லோன் மற்றும் கேயாவ் சுயெ ஓ இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

ராணுவத் தகவல்கள் மற்றும் ரக்கைன் மாநிலத்திலுள்ள ஓரிடத்தின் வரைபடத்தை அவர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், செவ்வாய்கிழமை மாலையில் அலுவல் ரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

''மியான்மர் ராணுவம் எங்களை பாலியல் வல்லுறவு செய்தது'': ரோஹிஞ்சா பெண் சாட்சியம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரோஹிஞ்சா

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்