உலகெங்கிலும் உள்ள வித்தியாச கட்டடங்கள் (புகைப்படத் தொகுப்பு)

2017 ஆம் ஆண்டு கட்டக்கலை புகைப்பட போட்டியில் 12 புகைப்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களை கண்களுக்கு விருந்தாக உங்களுக்கு வழங்குகின்றோம்.

படத்தின் காப்புரிமை MEHMET YASA
Image caption இத்தாலியில் வெரோனாவிலுள்ள இந்த கோபுரத்திலுள்ள மாடிப்பகுதி மற்றும் பெல் ஆகியவற்றின் தனித்துவமான நிலையின் காரணமாக மெக்மெட் யாசாவின் இந்தப் புகைப்படம் "கோபுரத்தின் கண்" என்று அழைக்கப்படுகிறது.
படத்தின் காப்புரிமை Hanqing Qu
Image caption ஹான்சிங் ச்சுவின் இந்தப் புகைப்படம் மலேசியாவின் தேசிய மசூதியில் எடுக்கப்பட்டது. "இந்த கட்டடத்தின் மீது சூரிய ஒளி விழுகின்றபோது, பிரகாசமும். நிழலும் ஒன்றையொன்று சந்தித்து கனவு போன்ற காட்சியை வழங்குகிறது" என்று அவர் கூறுகிறார். "இன்செப்ஷன் என்ற திரைப்படத்தை இது எனக்கு நினைவூட்டுகிறது" என்கிறார் அவர்.
படத்தின் காப்புரிமை Hans Wichmann
Image caption ஸ்பெயின் வட பகுதியில் அவிலஸ் கலாசார மையத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், ஹான்ஸ் விச்மான், மிதிவண்டி ஓட்டிச்செல்லும் ஒருவரை ஆவணப்படுத்தியுள்ளார். "பெரிய மற்றும் சிறிய மக்களுக்கு பழையதொரு தொழில்துறை இடத்தில் ஆஸ்கார் நைமேயரால் கட்டப்பட்ட நவீன கட்டடங்களின் வெற்றிக்கரமாக ஒன்றிணைப்பு" என்று இந்த அருங்காட்சியகத்தை அவர் அழைக்கிறார்.
படத்தின் காப்புரிமை FRANCIS MESLET
Image caption பிரான்சிஸ் மெஸ்லெட் இந்தப் புகைப்படத்தில் மேல்நோக்கி பார்த்து படம் பிடிக்க தெரிவு செய்துள்ளார். முதலாம் உலகப் போரின் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் பிரெஞ்சு நினைவகத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை Linda van Slobbe
Image caption "இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரையரங்கம் ஒருபுறம் மேடை, பல்லடுக்கு மாடிகள், வேறு எல்லாவற்றிலும் பலகணிகள் உள்ளடங்க நீள்வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது" என்று பிரான்ஸில் பார்-லெ-டுவிலுள்ள திரையரங்கத்தை பற்றி புகைப்படக்லைஞர் லின்டா த வான் ஸ்லோபி கூறுகிறார். "இது அழகாக அலங்காரங்களை கொண்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
படத்தின் காப்புரிமை Robert Cassway
Image caption ராபர்ட் காஸ்சவேயின் இந்தப் புகைப்படம் அமெரிக்காவில் மொன்டானாவில் ஃபிரெஸ்நோ பற்றிய பெரியதொரு தொடரின் பகுதியாக "த வேனிஸிங் வெஸ்ட்" என்று அழைக்கப்படுகிறது. ஃபிரெஸ்நோவில் வாழ்ந்த குடும்பங்கள் அவ்விடத்தை விட்டு சென்ற பின்னர், புறக்கணிப்பின் மூலம் சிதைந்துபோக விடப்பட்ட கட்டடத்தின் மீது காலமும், வானிலையும் காட்டியுள்ள அழிவின் தடங்களை இது காட்டுகின்றது" என்று அவர் கூறுகிறார்.
படத்தின் காப்புரிமை Andrean Hadhianto Kwee
Image caption சிங்கப்பூரில் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட நவீன கூம்பு வடிவ கட்டடக்கலை கட்டடமாக விளங்கும் புனித ஆன்ட்ரூ பேராலயத்தின் கோபுரம். அதனுடைய முற்காலத்திய வடிவத்தை இன்னும் பாதுகாத்து வருகின்ற இந்தப் பேராயலயம் அதனுடைய சுற்றுப்புறங்களோடு கம்பீரமாக நிற்கிறது.
படத்தின் காப்புரிமை Petr Starov
Image caption 21 ஆம் நூற்றாண்டு கல்லறை என்பது ரஷ்யாவின் ரியாசனில் எடுக்கப்பட்ட பெட்ர் ஸ்டாராஃபின் புகைப்படத்தின் தலைப்பாகும். இந்த புகைப்படம் வணிக வளாகம் ஒன்றின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
படத்தின் காப்புரிமை Guo Ji Hua
Image caption புவொ ஜி ஹூவா படம் பிடித்துள்ள சீனாவின் குவாங்தொங்கிலுள்ள இத்தகைய சாலைகள் குறுக்கு பாலம் வால்ஸ் என்று பெயர் பெற்றுள்ளன. ஆளில்லா விமானத்தின் மூலம் இது படம் பிடிக்கப்பட்டுள்ளது. "இந்த வேலைப்பாட்டின் குறுக்கு சந்திப்பு, அழகின் சுருக்கமான வரிபோல உள்ளது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
படத்தின் காப்புரிமை Dmytro Levchuk
Image caption இன்னொரு புகைப்படக் கலைஞர் டிமிட்ரோ லேவ்சும் மேலே பார்த்து புகைப்படம் எடுக்க முனைந்துள்ளார். துபாயில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் நிறங்கள் மற்றும் வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
படத்தின் காப்புரிமை Hossein Younesi
Image caption இரானிலுள்ள நவீன குடியிருப்பு கட்டடத்தில் சோதனை முயற்சியாக கட்டடப்பட்டுள்ள கட்டடக்கலையின் வடிவங்களை ஹூசைன் யோனிசி படம் பிடித்துள்ளார்.
படத்தின் காப்புரிமை Gautam Kamat Bambolkar
Image caption நியூ யார்க்கில் ஒரு ரயில் நிலையத்தில் தலைக்கு மேலுள்ள முரட்டுத்தனமான கடின கேபிள் குழாய்கள்,அச்சுறுத்தும் வடிவத்தை கொண்டுள்ளது" என்கிறார் கௌதம் கமாத் பாம்போல்கார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :