ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ராய் மூரே வெற்றி பெற மாட்டார் என்பது முன்பே தெரியும் : டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரே வெற்றி பெற மாட்டார் என முன்பே தாம் கூறியது சரியாகி விட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் சர்ச்சை : 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்

படத்தின் காப்புரிமை AFP

பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆங் சான் சூச்சியின் டப்ளின் விருதுக்கு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை EPA

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட டப்ளின் விருதை திரும்பிப் பெறுவதற்கு ஆதராக டப்ளின் நகரமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டு: ஈக்வடார் துணை அதிபருக்கு 6 ஆண்டுகள் சிறை

படத்தின் காப்புரிமை EPA

பிரேசிலை சேர்ந்த ஜாம்பவான் கட்டுமான நிறுவனமான ஓடிரெச்ச்ட்ட்டில் நடந்த ஊழல் ஊழல் தொடர்பாக ஈக்வடார் நாட்டின் துணை அதிபர் ஜோர்ஜ் கிளாஸுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :