மூரே தோற்றுவிடுவார் என்பது எனக்கு முன்பே தெரியும்: டிரம்ப்

டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரே வெற்றி பெற மாட்டார் என முன்பே தாம் கூறியது சரியாகி விட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றார்.

25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

மூரேவுக்கு அதிபர் டிரம்ப் ஆதரவளித்த நிலையில் டக் ஜோன்ஸ் எதிர்பாராத வெற்றி, டிரம்பிற்கு விழுந்த அடியாகப் பார்க்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

ராய் மூர் தாம் 14 வயதாக இருக்கும்போது தம்மை மயக்கி பாலியல் ரீதியாக தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவந்தார்

இந்நிலையில் செனட் தேர்தல் குறித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஆரம்பத்தில் பிரதான குடியரசு கட்சி எதிர்ப்பாளரான லூதருக்கு ஆதரவு அளித்ததை நினைவு படுத்தினார்.

தொலைபேசி மூலம் பேசிய டிரம்ப் தமக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோன்ஸ் தெரிவித்தார்.

ராய் மூரேவுடன் டிரம்ப் இதுவரை பேசவில்லை எனவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்