திருச்செந்தூர் கோவிலின் வெளிப் பிரகாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: இரண்டு பேர் காயம்

இடிந்து விழுந்த மண்டபம்
Image caption இடிந்து விழுந்த மண்டபம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலின் வெளி பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வெளியில் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள பிரகார மண்டபத்தில், வள்ளி கோவிலுக்கு எதிரில் உள்ள பகுதியில் பக்தர்கள் சிலர் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனர். அப்போது மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழந்தது.

இதில் ஒரு பெண் பலியானார். மேலும் இருவர் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக கோவிலின் நடை சாத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மண்டபம் இடிந்ததற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்