குஜராத் தேர்தல்: இன்று முடிகிறது வாக்குப் பதிவு

குஜராத் தேர்தலில் வாக்குபதிவு செய்த பெண்கள்

குஜராத் சட்டமன்றத்துக்கான கடைசி கட்ட தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. வடக்கு மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களின் 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இத்தேர்தலானது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான முக்கியமான நேரடிப்போட்டியாகும். தேர்தலில் நிற்கும் 851 பேரின் தலையெழுத்தை இரண்டாவது கட்ட தேர்தல் முடிவு செய்யவுள்ளது.

இன்று நடக்கும் வாக்குவப்பதிவானது துணை முதல்வர் நிதின் படேல், அமேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் பலத்தை நிர்ணயிக்கவுள்ளது.

மணி நகர் தொகுதி இரண்டாவது கட்ட தேர்தலில் மிகவும் முக்கியமான தொகுதியாகும். ஏனெனில் பிரதமர் நரேந்திர மோதி இந்த தொகுதியில் நின்று வென்று குஜராத் சட்ட சபைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

முதல் கட்டமாக நடந்த 89 தொகுதிக்கான தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாஜக மற்றும் காங்கிரசுக்கு அடுத்தபடியாக ஹர்திக் படேலின் இட ஒதுக்கீடு குறித்த பிரச்னை முதல் கட்ட தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது.

குஜராத் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. படேல் சமூகத்தினரின் வாக்குகள் இந்த தேர்தலின் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களையும், காங்கிரஸ் 61 இடங்களையும் வென்றது. இந்த தேர்தலில் ஹர்திக் படேல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்