ட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியை வாங்கும் டிஸ்னி

ரூபர்ட் முர்டோக்கின் ட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியை 52.4 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்ப்ட்டதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்திருக்கிறது

படத்தின் காப்புரிமை DISNEY

இந்த ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் ஒளிபரப்பு ஸ்கை, மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஃபாக்ஸ் திரைப்பட ஸ்டூடியோவின் 39% பங்குகளை வாங்கப்போவதாக டிஸ்னி அறிவித்தது.

ஃபாக்ஸ் நியூஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் உட்பட, ஃபாக்ஸ் நிறுவனத்தின் எஞ்சிய சொத்துக்கள் அடங்கிய ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்படும்.

86 வயதான ஃபாக்ஸ் நிறுவன உரிமையாளர் ரூபர்ட் முர்டோக், அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடக விரிவாக்கம் செய்துவந்தார். இந்த விற்பனை உடன்படிக்கையின் மூலம் அவரது விரிவாக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது.

படத்தின் காப்புரிமை MARK RALSTON/AFP/Getty Images

தனது தந்தையிடமிருந்து 21 வயதில் ஒரு ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரூபர்ட் முர்டோக், அதனை உலகின் மிகப்பெரிய செய்தி மற்றும் திரைப்பட சாம்ராஜ்யங்களில் ஒன்றாக விரிவாக்கினார்.

டைம்ஸ் மற்றும் சன் பத்திரிகைகளை சொந்தமாகக் கொண்டிருக்கும் நியூஸ் கார்ப், ட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் இருந்து விலக்கி தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை MARK RALSTON/AFP/Getty Images

பொதுவாக விரிவாக்கத்தில் நம்பிக்கைக் கொண்டவரான முர்டோக், தனது மகன்களான ஜேம்ஸ் மற்றும் லச்லான் ஆகிய இருவரிடமும் வியாபாரத்தை ஒப்படைப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விற்பனை செய்வது அனைவருக்கும் வியப்பை அளித்திருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :