இலங்கை தேர்தல்ஆணைக்குழு தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/AFP/GETTY IMAGES

எல்லை நிர்ணயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றபோது, நீதியரசர் பிரியதாச் டெப்பினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ உள்ளிட்ட மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைகால தடையுத்தரவு பிறப்பிக்க கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹெலபிரிய நந்தராஜா இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எல்லை நிர்ணய நடவடிக்கையின்போது, அம்பகமுவ பிரதேச சபை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதால் சிவனொலிபாதமலையும் பிரிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் சமய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹெலபிரிய நந்தராஜாவினால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்