ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை EPA

ஆஸ்ரியன் பீப்பிள் பார்ட்டி தலைவரான செபாஸ்டியன் கூர்ட்ஸ் மற்றும், குடியேற்றத்திற்கு எதிரான சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகிக்கும் கிரிஸ்டியன் ஷ்ட்ராஹாவிற்கு இடையே, கூட்டணி ஒப்பந்தம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆஸ்ரியாவில் புதிய நிர்வாகத்தை உருவாக்குவதற்காக, அந்நாட்டு அதிபர், அவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை அதிபர் உறுதி செய்தால், 31வயதாகும், செபாஸ்டியன் கூர்ட்ஸ், உலகின் மிகவும் இளமையான தேசிய தலைவராவார்.

படத்தின் காப்புரிமை EITAN ABRAMOVICH/AFP/Getty Images

பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குட்சீன்ஸ்கீ மீது, எதிர்கட்சியினர் குற்றச்சாட்டிற்கான தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். பிரேசிலை சேர்ந்த நிறுவனத்திடம், அவர் சட்டவிரோதமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை கொண்டுள்ள அந்த தீர்மானத்தில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் அதிபர், பதவி விலகலுக்காக வந்த குரல்களையும் நிராகரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Press Eye

கடந்த மாதம், வடகொரியா சோதித்த கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணை, அமெரிக்காவிற்கான அச்சுறுத்தலாக இருக்காது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நாவின் பாதுகாப்புக்குழு கூட்டத்தை நடத்திய ஐ,நா பொதுசெயலாளர் ஆண்டோனியோ கட்டர்ஸ், தவறான புரிதல்கள் மூலம், போர் உருவாக்கக்கூடிய ஆபத்தை, வடகொரியா உடனடியாக குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை RODRIGO ARANGUA/AFP/Getty Images

மெக்சிகோவின் முன்னாள் ஆளுநரான ராபர்ட்டோ போர்க்கை ஒப்படைப்பதாக பனாமா ஒப்புக்கொண்டுள்ளது. மெக்சிகோவின், குவினடானா ரூவில், திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஊழல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆறுமாதங்களுக்கு முன்பு, பிரான்ஸிற்கு தப்ப முயன்ற அவர், பனாமா நகரில் கைது செய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை JEKESAI NJIKIZANA/AFP/Getty Images

ஜிம்பாப்வேவின் ஸனு- பி.எஃப் கட்சியின் தலைவராகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலின் வேட்பாளராகவும் இருப்பதற்கான ஒப்புதலை, அந்நாட்டு புதிய அதிபரான எமர்சன் முனங்காக்வா பெற்றுக்கொண்டார். முன்னாள் அதிபர் ராபர் முகாபே பதவியை ஒப்படைத்ததை தொடர்ந்து நடந்த கட்சியின் மாநாட்டில் எமர்சன் பேசினார். அதில், ஸனு-பி .எஃப் கட்சி, நாட்டின் ஜனநாயக பணிகளை மதிக்கும் என்று கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்