ஐ.எஸ் அமைப்புக்கு பணம் அனுப்ப பிட்காயினை பயன்படுத்திய பெண் கைது: போலீஸ்

  • 16 டிசம்பர் 2017
பிட்காயின் மூலம் ஐ.எஸ் அமைப்புக்கு பணம் அனுப்பிய பெண் படத்தின் காப்புரிமை PA

ஐ.எஸ் அமைப்புக்கு பணத்தை அனுப்புவதற்காக பிட்காயின் மற்றும் மற்ற கிரிப்டோகரன்சிகளின் மோசடி செய்தததாக ஒரு நியூயார்க் பெண் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

வங்கி மோசடி, பண மோசடி செய்வதற்கு சதி செய்தது மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் 27 வயதான ஸோபியா ஷாநஸ் மீது பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்த ஷாநஸ், அமெரிக்காவில் ஆய்வக தொழில்நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார்.

இணையத்தில் பிட்காயின் வாங்குவதற்காக 85,000 டாலர் மோசடி கடனை அவர் பெற்றதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பிட்காயின் என்பது இணைய பணமாகும். இது சட்ட பூர்வமானது அல்ல என்றாலும், இந்த ஆண்டு இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஷாநஸ் ஜூலை மாதம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். பிறகு இஸ்தான்புல்லில் நின்று செல்லும் பாகிஸ்தான் விமான டிக்கெட்டை பதிவு செய்துள்ளார். சிரியா செல்ல வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்துள்ளது.

முன் அனுமதி பெறாமல் ஒரு நபர் அமெரிக்காவில் இருந்து சட்டப்பூர்வமாக, 10,000 டாலர் பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், அவர் 9,500 டாலரை பணமாக எடுத்துச் சென்றபோது ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஐ.எஸ் அமைப்பு குறித்த தகவல்களை இவர் பலமுறை தேடியிருந்தது, இவரது மின்னணு சாதனங்களை சோதனை செய்தபோது தெரியவந்தது.

சிரிய அகதிகளுக்கு உதவுவதற்காக வெளிநாடுகளுக்கு ஷாநஸ் பணம் அனுப்பியதாக அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்