ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 17 டிசம்பர் 2017

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

அமெரிக்கா: சான்டா பவுலா நகரத்தில் மீண்டும் தோன்றிய தீப்பிழம்பு

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவில் சான்டா பவுலா நகரத்தில் பெரிய காட்டுத்தீக்கான அறிகுறிகள் மீண்டும் தென்படுவதால் அங்கிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று கலிஃபோர்னிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அர்ஜென்டினா கடற்படை தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

படத்தின் காப்புரிமை AFP

தெற்கு அட்லான்டிக் கடலில், கடந்த மாதம் அரா சன் குவான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதையடுத்து அர்ஜென்டினா கடற்படை தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிசீலனை

படத்தின் காப்புரிமை Spencer Platt

ஜெருசலேத்தின் நிலைப்பாடு குறித்து எடுக்கப்படும் தன்னிச்சையான எந்த முடிவும் சட்ட ரீதியான விளைவுகளை கொண்டிருக்காது என்ற வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிசீலிக்கிறது.

சிலியில் நிலச்சரிவு- சுமார் 5 பேர் உயிரிழப்பு

படத்தின் காப்புரிமை AFP

தென் சிலியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்காவின் மில்லியன் டாலர் திட்டம்

படத்தின் காப்புரிமை AFP

விண்ணில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து விசாரிக்க பல மில்லியன் டாலர் செலவில், ரகசிய திட்டத்தை நடத்தி வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :