சிலி நாட்டில் நிலச்சரிவால் சிதைந்து போன கிராமம்

  • 17 டிசம்பர் 2017
சிலி படத்தின் காப்புரிமை Reuters

தென் சிலியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அங்கு சுற்றுலா வாசிகளிடையே பிரபலமான ஏரிப்பகுதியில் உள்ள வில்லா சான்டா லூசியா என்ற கிராமத்தில் 15 பேர் காணாமல் போயுள்ளனர்.

அதனால் அப்பகுதியில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் மீச்செல் பச்செலட்.

ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பதோடு, நாட்டின் மற்ற பகுதிகளுடனான தொடர்பையும் இழந்துள்ளனர்.

"லூசியா கிராம மக்கள் பாதுகாபுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு மீட்புக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக" அதிபர் பச்செலட் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

சிலி தலைநகர் சான்டியாகோவின் தெற்கில் சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இக்கிராமத்தில் உள்ள பள்ளத்தாக்கின் ஒரு பகுதி முழுவதும், சுற்றியுள்ள மலைகளில் இருந்த பெருமளவு மண்ணால் சூழப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானம் மூலம் காப்பாற்றப்பட்ட டஜன் கணக்கான மக்கள், அருகில் உள்ள சைட்டன் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Reuters

உயிர்பிழைத்திருப்பவர்களை, மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இந்த கிராமம், கொர்கொவாடூ தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது. இங்குள்ள எரிமலைகள், கடற்பகுதிகள் மற்றும் காடுகள் சுற்றுலா வாசிகள் இடையே மிகவும் பிரலமானதாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்