ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ரஷியா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Getty creative stock

ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தேவாலயத்தில் நடக்கவிருந்த தாக்குதலை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு தந்த தகவலின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்கா மற்றும் ரஷிய தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆங் சான் சூச்சி மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்?

படத்தின் காப்புரிமை EPA

ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு காரணமானவர்கள், நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமை மீறல் கண்காணிப்பு குழுவின் செய்ட் ராட் அல் ஹுசைன் தீர்மானமாக உள்ளார்.

மீண்டும் சிலி நாட்டின் அதிபரானார் பினரா

படத்தின் காப்புரிமை Getty Images

சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், செபஸ்டியன் பினரா 54 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தில் மின்வெட்டு

படத்தின் காப்புரிமை Getty Images

உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையமான அமெரிக்காவில் உள்ள அட்லான்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் விமான நிலையத்தில் மின்வெட்டு ஏற்பட்டதையடுத்து அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :