ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

தடம் புரண்ட ரயில்:

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரயில் பெட்டியின் பின் பகுதி

அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலையில் வாஷிங்டன்னில் பயணிகள் ரயில் ஒரு பாலத்தில் தடம் புரண்டதில் மூன்று பேர் இறந்துள்ளனர்.

ஆஃபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்வு:

படத்தின் காப்புரிமை EPA

தென் ஆஃப்பிரிக்காவில் ஆளும் ஆஃபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக சிரில் ராமபோஸா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்க பொருளாதாரம்:

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு திட்டம் குறித்து விவரித்த அதிபர் டொனால்ர் ட்ரம்ப் சீனாவையும், ரஷ்யாவையும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள் என்று வர்ணித்தார்.

ஸ்பின் தலைவர் ராஜினாமா:

படத்தின் காப்புரிமை AFP

பிரத்யேக விளையாட்டு தொலைக்காட்சி சேனலான ஈஎஸ்பிஎன்னின் தலைவர் ஜான் ஸ்கிப்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போதைமருந்துக்கு அடிமையானதுதான் தன் ராஜினாமாவுக்கு காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்