ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பிரிட்டனில் பயங்கரவாத சதித்திட்டம் ஒன்று முறிடிப்பு

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

டெர்பிஷைரில் போலீஸாரும், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் சோதனையிடும் காட்சி

பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தாக்குதல் நடந்திருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் இஸ்லாமியவாத பயங்கரவாத சதித்திட்டம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வரி விதிப்பில் மறுசீரமைப்பு: அமெரிக்க செனட் சபை இன்று ஒப்பதல்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் வரி விதிப்பு முறையில் மிகப்பெரியளவிலான மறுசீரமைப்புகளை செய்யும் ஒரு சட்டத்திற்கு, குடியரசு கட்சியின் உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் செனட் சபை இன்று ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் - கிழக்கு மெக்சிக்கோவில் விபத்தில் சிக்கி 12 சுற்றுலா பலி

பட மூலாதாரம், EPA

சொகுசு கப்பலிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த பேருந்து தென் - கிழக்கு மெக்சிக்கோவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏமனிலிருந்து வீசப்பட்ட ஏவுகணையில் இரானின் அடையாளம்

பட மூலாதாரம், Reuters

செளதி தலைநகர் ரியாத்தை நோக்கி ஏமன் நாட்டிலிருந்து வீசப்பட்ட ஒரு ஏவுகணையில், இரானால் வழங்கப்பட்ட ஒரு ஆயுதத்தின் அடையாளங்களை கொண்டிருந்ததாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.

மேகாங் ஆற்றுப்பகுதியில் புதிய இனங்கள் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், PA

திபெத்திய பீடபூமியிலிருந்து தென் சீனக்கடல் வரை நீண்டிருக்கும் மேகாங் ஆற்றுப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக வனவிலங்கு நிதியம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :