சீனாவில் நூடுல்ஸ் விற்பனை குறையும் மர்மம் என்ன?

எளிதாக சமைக்கக்கூடிய, விலை மலிவான இன்ஸ்டென்ட் நூடுல்ஸ் நீண்டகாலமாக சீனாவின் சிறந்த வசதியான உணவாக இருந்த வந்துள்ளது.

நூடுல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மாணவர்களுக்கு சிற்றுண்டியாகவும், ரயிலில் சாப்பாடாகவும், அல்லது பசியாக இருக்கும் தொழிலாளர்கள் தேர்வு செய்வதாகவும் இருக்கும் நூடுல்ஸ் 2013 ஆம் ஆண்டு சீனாவிலும், ஹாங்காங்கிலும் மொத்தம் 46.2 பில்லியன் பாக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த விற்பனை 2016 ஆம் ஆண்டு 38.5 பில்லியன் பாக்கெட்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக இன்ஸ்டென்ட் நூடுல்ஸ் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த வீழ்ச்சி 17 சதவீதமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக பிற இன்ஸ்டென்ட் நூடுல்ஸ்களின் சந்தைகள் ஓரளவு நிலையாகவே இருந்து வந்துள்ளன. 2015 இல் இந்தியாவில் மேகி நூடுல்ஸ் திரும்ப பெறப்பட்டபோது மிக பெரிய வீழச்சி கண்டது மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதுவொரு அசாதாரண நிலை.

சீனா எவ்வாறு பல வழிகளில் மாறிக்கொண்ருக்கிறது என்பதை இந்த நூடுல்ஸின் வீழ்ச்சி காட்டுகிறது.

எதிர்பார்ப்பு: வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணவில் விருப்பம்

இன்ஸ்டென்ட் நூடுல்ஸுக்கான சேர்வைகள் தெளிவாக தெரிபவை: வெந்நீரை மட்டும் சேர்க்கவும், பாக்கெட்டில் அடைத்த சாஸ், சிறிய பாக்கெட் உலர்ந்த காய்கறிகள் மற்றும் இறைச்சி.

இவற்றை சொல்ல கேட்கிறபோது சாப்பிடும் விருப்பம் ஏற்பட்டாலும். சாப்பாடு தொடர்பாக சீன நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவது இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக இருக்கலாம்.

"இந்த இன்ஸ்டென்ட் நூடுல்ஸ் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சீனாவின் நுகர்வு முறையில் ஏற்பட்டுள்ள திருப்பத்தை காட்டுகிறது என்று சர்வதேச வர்த்தக வளர்ச்சிக்கான சீனக் கழகத்தை சேர்ந்த ட்சாவ் பிங் தெரிவித்திருக்கிறார்.

தங்களுடைய வயிற்றை நிரப்பிக் கொள்வதை விட தரமான வாழ்க்கையை நுகர்வோர் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP

மக்கள்தொகை மாற்றம்: வீட்டிற்கு திரும்பும் கிராமப்புற தொழிலாளர்கள்

இன்ஸ்டென்ட் நூடுல்ஸை பெருமளவு நுகவோரில் ஒரு பகுதியினர் இடம்பெயரும் தொழிலாளர்கள்.

இதனை பற்றி நீங்கள் எண்ணி பார்த்தால் விபரங்கள் புரியும். இந்த தொழிலாளர்கள் வீட்டை விட்டு தொலைவில் உள்ளனர். அடிக்கடி மிகவும் குறைவான சமயல் வசதிகளை கொண்ட இடத்தில் அவர்கள் வாழ்கின்றனர்.

தங்களுடைய குடும்பத்தினருக்கு அதிக பணம் அனுப்புவதற்காக அதிக பணத்தை சேமிப்பதில் குறியாக உள்ளனர்.

2014 ஆம் ஆண்டு வரை கிராமத்திலிருந்து நகரப் புறங்களுக்கு குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

ஆனால், இரண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பாணி தலைகீழாக மாறியுள்ளது. (2017 ஆம் ஆண்டு தரவு வெளிவரும்போதும் இதையே காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.)

2015 ஆம் ஆண்டைவிட 1.7 மில்லியன் குறைவான இடம்பெயரும் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு நகரங்களில் வாழ்ந்துள்ளனர். இதனால், நூடுல்ஸ் சாப்பிடுவது கணிசமான அளவு குறைந்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

பயணம்: உள்கட்டுமான வசதிகள் மேம்பாடு, நடத்தைகள் மாற்றம்

20 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று அல்லது அதற்கு மேலான நாட்கள் எடுத்து நாட்டின் குறுக்கே ரயில் பயணம் செய்தபோது, பானை பானையாக இன்ஸ்டென்ட் நூடுல்ஸ் சாப்பிட்டு நான் வயிற்றை நிறைத்து கொண்டேன்.

பல முறை, வண்டி தள்ளாடுவது, சந்தடி போன்ற காரணங்களால் சூடான காரமான நூடுல்ஸ் என் கண்களில் தெரித்துள்ளது.

ஆனால், சீனாவின் ரயில்களும், ரயில் நிலையங்களும் மேம்பட்டுள்ளன. பயணங்கள் விரைவாகியுள்ளன. சர்வதேச உணவுகளை தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், ரயில்வே துறையில் நூடுல்ஸ் விற்பனை குறைந்துள்ளது.

மேலும், விமானப் பயணம் அதிகரித்துள்ளது. ரயில் பயணங்களை மேற்கொள்வதைவிட, உள்ளூர் மற்றும் சர்வதேச விடுமுறை சுற்றுலா பயணங்களில் பில்லியன் கணக்காக செலவிடும் பண்பு சீன மக்களின் நடுத்தர வர்க்கத்தினரிடம் வளர்ந்துள்ளது.

சீன பொது விமானப் பயணத்துறையின் தகவலின்படி 2016 ஆம் ஆண்டு ஏறக்குறைய 500 மில்லியன் உள்ளூர் மற்றும் சர்வதேச பயணங்கள் சீன மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், உள்நாட்டு விமானங்களில் மூன்றில் ஒரு பங்கு கடந்த ஆண்டு தாமதமானது. பல பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், நூடுல்ஸ் விற்பனையை அதிகரிக்கும் சிறந்த இடமாக சில விமான நிலையங்கள் இருந்திருக்கலாம்.

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் இணையம்: 'விரைவு உணவின்' இன்னொரு வடிவம்

சீன அரசுத் தகவல்கள்படி, 730 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 95 சதவீத்த்தினர் இணையத்தை பயன்படுத்த திறன்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் உணவு வகைப்பட்டியல் ஒரு நூடுல்ஸை விட அதிக தொகையுடையதே.

இந்த உணவு இன்னும் மலிவானதாக இருக்க முடியும். மேலும் சுவையானதாகவும் இருக்கலாம்.

நேர்மறைவாதம்

இந்த வரைபடம் காட்டுவதுபோல இன்ஸ்டென்ட் நூடுல்ஸை பொறுத்தவரை சீன இன்னும் பெரிய சந்தையாக உள்ளது.

பக்கத்து போட்டியாளரான வியட்நாமை விட சுமார் 3 மடங்கு அதிக பாக்கெட்டுகள் சீனாவில் விற்கப்பட்டுள்ளன.

உண்மையில், சீனா பயன்படுத்தும் மொத்த நூடுல்ஸ், இந்தோனீஷியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் சேர்ந்து பயன்படுத்தி வருகின்ற நூடுல்ஸுக்கு சமம்.

இதனால், உலகளாவிய நூடுல்ஸ் தயாரிப்பாளாகள் சீன சந்தையில் இருந்து வெளியேறிவிடுவதற்குத் தயாராக இல்லை.

ஜப்பானின் இன்ஸ்டென்ட் நூடுல்ஸ் வர்த்தக நிஸான் உணவு நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், ஹாங்காங்கில் பங்கு சந்தையில் புதிதாக ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அதனால், 145 மில்லியன் டாலர் வர்த்தகம் உயரும் என்று அது எதிர்பார்க்கிறது.

ஜப்பான் நிறுவனம் ஹாங்காங்கில் இவ்வாறு திட்டமிடுவது மிகவும் அரிதானது. ஆனால், சீனாவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை நிஸான் முன்னெடுக்கிறது. அங்கு நிஸான் 5வது பெரிய பிரான்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டென்ட் நூடுல்ஸ்களை சாப்பிடுவதை சில வாடிக்கையாளர்கள் நிறுத்திவிட்டனர். ஆனால், பெரும்பாலான வாடிக்கையாளா்கள் தரத்தை அதிகரிக்கவே விரும்புகின்றனர் என்று தலைமை செயலதிகாரி கியோடாகா அன்டோ சிஎன்பிசியிடம் கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார்.

"உயர்தர உற்பத்தி பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம் நமது வர்த்தகத்தை வளர்க்க நமக்கு அதிக சாத்தியம் ஏற்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :