ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

24 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து பிறந்த குழந்தை

படத்தின் காப்புரிமை NATIONAL EMBRYO DONATION CENTER
Image caption குழந்தை எம்மா

அமெரிக்காவில் சுமார் 25 அண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறை தொடங்கியதிலிருந்து கருத்தரிப்பு மற்றும் பிறப்பு இடையேயான நீண்ட இடைவெளி இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதி கிடையாது: மிரட்டும் டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஆதரவுத்தரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தொலைப்பேசி எண்ணை தவறுதலாக ட்வீட்டிய எலான் மஸ்க்

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption 16.7 மில்லியன் பேர் எலான் மஸ்க்கை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்

ஆற்றல் மற்றும் போக்குவரத்து தொழில்முனைவர் எலான் மஸ்க் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய தனிப்பட்ட தொலைப்பேசி எண்ணை தவறுதலாக ட்வீட்டியுள்ளார். அவரை 16.7 மில்லியன் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

முதுமையை தாமதப்படுத்தும் மருந்துகள் வெகு விரைவில்

Image caption பலநூறு ஆண்டுகளுக்கு மனிதர்களால் வாழ முடியும் என்கிறார் ஆப்ரே டி கிரே

முதுமையை தாமதப்படுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு ஆயுளை நீட்டிக்கும் மருந்துகள் கூடிய விரைவில் வரலாம் என்று அமெரிக்காவில் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் துணை பிரதமர் டாமியன் கிரீன் பதவி நீக்கம்

படத்தின் காப்புரிமை PA

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும், பிரிட்டனின் துணை பிரதமருமான டாமியன் கிரீன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2008ல் அவருடைய அலுவலக கணிணியில் ஆபாச படங்கள் இருந்ததாக நடைபெற்ற விசாரணையில் தவறான தகவல்களை டாமியன் கூறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :