ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

தென் கொரிய உடற்பயிற்சிக் கூடத்தில் தீ: 29 பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters

தென் கொரியாவிலுள்ள ஓர் உடற்பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

மியான்மர்: ரோஹிஞ்சா விவகாரத்தில் முக்கிய நபர்களை தடை செய்தது அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Reuters

ரோஹிஞ்சா மக்களுக்கு எதிராக ஓர் இன அழிப்பு பிரசாரத்தை முன்னெடுத்ததாக மியான்மரின் மியான்மர் ராணுவ ஜெனரல் ஒருவருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கேட்டலன் தேர்தல்: பெரும்பான்மையை தக்கவைத்த பிரிவினைவாதிகள்

படத்தின் காப்புரிமை Reuters

கேட்டலன் பிராந்தியத்துக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் நிலையை நோக்கி செல்வதால், ஸ்பெயின் அரசாங்கத்துடன் கூடுதல் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆல்பாபெட் நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் எரிக் ஸ்கிமிட்

படத்தின் காப்புரிமை AFP

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிர்வாக தலைவர் பதவியிலிருந்து எரிக் ஸ்கிமிட் வரும் ஜனவரி மாதம் விலகவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வரி உயர்வு: நைஜரில் வெடித்தது போராட்டம்

2018ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்ட வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நைஜர் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :