ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சான் பிரான்சிஸ்கோவில் தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படை வீரர் கைது

பட மூலாதாரம், Getty Images

சான் பிரான்சிஸ்கோவில் தாக்குதல் நடத்ததிட்டமிட்ட முன்னாள் கடற்படை வீரர் கைது

சான் பிரான்சிஸ்கோவின் மிக பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கிறிஸ் 39 இல் கிறிஸ்துமஸ் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக ஒருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க வீரரான எவரிட் ஆரோன் ஜேம்சன், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதாரங்களை வழங்குவதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP

தேச ஒற்றுமையை குலைப்பவர்களுக்கு ஆதரவில்லை: ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயின் அரசாங்கத்திற்கும் கேட்டலான் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் நிலவி வரும் நிலைப்பாடு முறிவடைவதற்கு கேட்டலோனியாவில் நடைபெற்ற பிராந்திய தேர்தல்கள் வழிவகுத்துள்ளன என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை.

தேச ஒற்றுமையை குலைக்கும் எதற்கும் தான் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

ஊழல் குற்றச்சாட்டில் 2 முன்னாள் கால்பந்து அதிகாரிகளுக்கு தண்டனை

முன்னணி கால்பந்து போட்டிகளுக்கான ஒளிபரப்பு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக பெற்ற வழக்கில் இரண்டு முன்னாள் தென் அமெரிக்க கால்பந்து அதிகாரிகள் குற்றவாளிகள் என நியூயார்க்கில் நடந்த விசாரணையின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்த பராகுவேயின் ஜுவான் ஏஞ்சல் நொபவுட் மற்றும் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான ஜோஸ் மரியா மரின் ஆகியோர் நீண்ட கால சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

அகதிகளை லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அனுப்பும் பணி தொடக்கம்

பாதிக்கப்படக் கூடிய நிலையிலுள்ள அகதிகளை லிபியாவிலிருந்து இத்தாலிக்கு அனுப்பும் பணியை ஐக்கிய நாடுகள் சபை தொடங்கியுள்ளது. முன்னதாக இதை ஒரு வரலாற்று ரீதியான செயல் என்று இத்தாலிய உள்துறை அமைச்சர் வரவேற்றிருந்தார்.

லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து குடும்பங்கள், ஒற்றை தாய்மார்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் என 162 பேர் வெளியேற்றப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :