"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்"

சீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்"

பட மூலாதாரம், Getty Images

இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆலன் டொனால்டிற்கு ரகசிய ராஜதந்திர தகவல் பறிமாற்ற முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அளித்தவர், அப்போதைய சீன அரசின் குழுவில் இருந்தவர் என்று டொனால்டு கூறுகிறார்.

இதற்கு முன்பு வெளியான அறிக்கைகளின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்திற்கு மேல் என்றே கூறப்பட்டது.

போராட்டத்திற்கு பிறகு, 1989ஆம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் சீனா வெளியிட்ட அறிக்கையில்,ஜூன் 4ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பொதுமக்களில் 200 பேர் இறந்ததாகவும், பல பாதுகாப்பு அதிகாரிகள் இறந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இந்தத் தந்தி வந்துள்ளது. இதுகுறித்து கூறும் டொனால்டு, இந்தத் தகவலை பெற்றுத் தந்தவர், "அப்போதைய சீன அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த ஒருவரின் நெருங்கிய நண்பர் என்றும், அவரின் மூலமாக இந்த தகவல்கள் பறிமாறப்பட்டன" என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தத் தகவல்கள் லண்டனிலுள்ள பிரிட்டன் தேசிய ஆவணக்காப்பத்தில் வைக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம், ஹெச்.கே.01 என்ற செய்தி தளத்தில் வெளியாகின.

இந்தத் தகவல் அளிப்பவர் மிகவும் நம்பிக்கையானவர் என்றும், கடந்த காலங்களில் "நம்பத்தகுந்த கருத்துகளையும், புரளிகளையும் பிரித்துப்பார்க்கும் சரியான தன்மை கொண்டவர்" என்று ஆலன் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், AFP

"மாணவர்கள் ஒரு மணிநேரத்தில், சதுக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று இருந்தனர். ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில், அவர்கள் டாங்கிகளால் தாக்கப்பட்டனர்" என்று டொனால்டு எழுதியுள்ளார்.

"மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தபோதிலும், அவர்கள் கொல்லப்பட்டனர். பிறகு, ஏ.பி.சி டாங்கிகள், அவர்கள் உடல்கள் மீது பலமுறை ஏற்றி இறக்கப்பட்டன. அந்த நசுங்கிய உடல் மிச்சங்கள், கனரக வாகனத்தில் சேமிக்கப்பட்டன. அவை, எரிக்கப்பட்டு, மிச்சங்கள் கால்வாய்களில் கரைக்கப்பட்டன," என்று குறிப்பிட்டுள்ளார்.

"காயப்பட்டு, உயிருக்காக கெஞ்சிய நான்கு பெண்கள், துப்பாக்கி முனையில் உள்ள ஈட்டியால் கொல்லப்பட்டனர்."

மேலும், "அரசின் குழுவிலிருந்த சில உறுப்பினர்கள், உள்நாட்டுப்போர் உடனடியாக தேவை என்று கருத்தில்கொண்டனர்" என்றும் டொனால்டு குறிப்பிடுகிறார்.

ராணுவம் அனுப்பப்படும் வரை, ஏழு வாரங்களுக்கு இந்த அரசியல் போராட்டம் நடைபெற்றது. கம்யூனிச சீனாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் இதுவாகும்.

இந்த கொலைகள், சீனாவில் இன்னும்கூட உணர்ச்சி மிகுந்த சம்பவமாக உள்ளன.

இந்த சம்பவம் குறித்து சமூக வளைத்தளங்களில் விவாதிப்பது குறித்து அதிக கட்டுப்பாடுகளை சீனா விதிக்கிறது. அனைத்து செயல்பாட்டாளர்களின் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை தடைசெய்துள்ளது.

ஆனாலும், உலகளவில் பல இடங்களில் இதன் நினைவுநாளுக்காக ஆண்டுதோறும் பல செயல்பாட்டாளர்களால் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, ஹாங்காங் மற்றும் தைவானில் இந்த நினைவு அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிறது.

காணொளிக் குறிப்பு,

வலிமையான வளமான சீனா : அதற்கான விலை என்ன?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :