ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

அரசியல் கைதிகள் விடுதலை

படத்தின் காப்புரிமை Getty Images

அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 80 பேரை வெனிசுவேலா அரசு விடுவிக்கத் துவங்கியுள்ளது. கிட்டதட்ட 300 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

பிலிப்பைன்ஸில் தீ விபத்து

பிலிப்பைன்ஸின் தவோ நகரத்தில் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 25 பேர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ராணுவத் தலைவருக்கு கட்சி பதவி

படத்தின் காப்புரிமை AFP

ஜிம்பாப்வேவின் ஆளும் ஜானு பிஃப் கட்சியின் துணை தலைவராக ராணுவத் தலைவர் சிவென்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான ராணுவமே நாட்டின் அதிபர் அதிபர் ராபர்ட் முகாபேவை பதவியில் இருந்து அகற்றியது.

வலுக்கும் அரசுக்கு எதிரான போராட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்ரேலின் அரசு ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, டெல் அவிவ் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :