பிலிப்பைன்ஸ் ஷாப்பிங் மாலில் தீ: 37 பேர் இறந்ததாக அச்சம்

பிலிப்பைன்ஸ் ஷாப்பிங் மாலில் தீ: 37 பேர் இறந்ததாக அச்சம் படத்தின் காப்புரிமை Reuters

தெற்கு பிலிப்பைன்ஸின் தவோ நகரத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஷாப்பிங் மாலில் மூன்றாம் மாடியில் பற்றிய தீ, அதற்கு மேல் உள்ள மாடிகளுக்குப் பரவியதால் அங்குள்ள கால் சென்டரின் ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் "பூஜ்யம்" என தவோவின் துணை மேயர் பாவோலோ டுடெர்டே கூறியுள்ளார்.

துணை மேயர் பாவோலோ டுடெர்டேவின் தந்தையும், பிலிப்பைன்ஸ் அதிபருமான ரொட்ரிகோ டுடெர்டே சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

தவோவை சேர்ந்த அதிபர் டுடெர்டே, என்சிசிசி மாலின் வெளியே தீயில் சிக்கிக்கொண்ட நபர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார்.

தீ பிடித்ததற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்கப்பட்டுவந்த மூன்றாம் மாடியில் முதலில் தீ பற்றியது என ஷாப்பிங் மாலில் மேலாளர் ஜன்னா அப்துல்லா முத்தலிப் கூறியதாக பிலிப்பைன்ஸ் ஸ்டார் இணையதளம் கூறுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்