நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் வெற்றி பெற்ற செய்திதான் அனைத்து நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

தினத்தந்தி

ஆர்.கே நகர் தேர்தலில் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாகக் களம் இறங்கி அமோக வெற்றி பெற்று, புதிய சாதனை படைத்தார் என்ற செய்தி தினத்தந்தியின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற பிறகு பேட்டியளித்த தினகரன்,'' ஜெயலலிதா வீட்டுச்சென்ற பணியைத் தொடருவேன்''என கூறிய செய்தியும் முதல் பக்கத்தில் உள்ளது.

தினமலர்

தினகரன் பெரும் 'விலை' கொடுத்து வாங்கிய குக்கர் விசிலடித்தது என தினகரன் வெற்றி பற்றி தினமலர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தினகரன் வெற்றி பெற்றதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றப்படலாம் என்ற பேச்சு அதிமுகவில் எழுந்துள்ளது எனவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்துப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஐயப்பாடுகளை எழுப்பியிருந்தனர் எனவும், இந்த முறை குஜராத் மற்றும் ஹிமாச்சலில் உள்ள சட்டப்பேரை தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியைத் தேர்ந்தெடுத்து அங்கே மின்னணு வாக்குப்பதி இயந்திரத்துடன் வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட்டர் எனப்படும் வாக்காளர் சரிபார்ப்பு சீட்டுக்கான இணைப்பு பொருத்தப்பட்டது சரிபார்க்கப்பட்டது எனவும் தினமணி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை இன்னும் தொடர்வது தேவையற்றது எனவும் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா

டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் இடத்தைப் பெற்றதுடன் மூன்று மாதத்தில் ஆட்சி கவிழும் என்று கூறியதும், இமாச்சலப்பிரதேசத்தின் முதலமைச்சராக ஜெய் ராம் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

"திமுகவை அழித்த டிடிவி தினகரனின் சுனாமி" என்ற தலைப்பில் முதற்பக்க கட்டுரையை தாங்கி வந்துள்ள இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கப்படவுள்ளது என்றும், தலையங்க கட்டுரையாக இணைய சமநிலை விவகாரத்தில் அமெரிக்காவின் சமீபத்திய எண்ண மாற்றம் குறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்