எமிரேட்ஸ் நிறுவன விமானங்கள் துனிசியாவில் தரையிறங்க தடை

படத்தின் காப்புரிமை AFP/Getty

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் துனிசிய பெண்களை ஏற்றுவதற்கு மறுத்தததால், அந்நிறுவன விமானங்கள் நாட்டின் தலைநகரான துனிசில் தரையிறக்குவதற்குதுனிசியா தடை விதிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் இந்நடவடிக்கை "இனவெறி மற்றும் பாகுபாடுடையது" என்று துனிசியாவின் மனித உரிமைகள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனம் மற்றும் எதிர்ப்பை பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"சர்வதேச சட்டம் மற்றும் உடன்படிக்கைக்கு உட்பட்டு விமான சேவைகளை இயக்கும் வரை" எமிரேட்ஸ் மீதான இந்த தடை தொடருமென துனிசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"பாதுகாப்பு சார்ந்த தகவலே" தாமதத்திற்கு காரணம் என்று எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குறிப்பிட்ட நடவடிக்கைளை எடுப்பதற்கு காரணமான பாதுகாப்பு சார்ந்த தகவல்கள் குறித்து எங்களது துனிசிய சகோதர்களிடம் பேசினோம் " என்று ஐக்கிய அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர் அன்வர் கர்காஷ் ஞாயிற்றுக்கிழமையன்று ட்விட்டரில் தெரிவித்தார்.

"நாங்கள் துனிசிய பெண்களை பெரிதும் மதிக்கிறோம்" என்று மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உடைந்துபோன உறவு

ஐக்கிய அரபு நாட்டிலிருந்தோ அல்லது அந்நாட்டின் வழியாகவோ செல்லும் விமானங்களில் துனிசிய பெண்கள் செல்வதற்கு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளதாக துனிசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்துவதற்காக வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய அரபு நாடுகளின் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக துனிசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக துபாய்க்கு செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் ஏறுவதற்கு துனிசிய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான தங்களது பயணம் தாமதப்படுத்தப்பட்டதாகவும், தங்களின் சிலர் விசாக்கள் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் சில துனிசிய பெண்கள் கூறியதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் கூறுகிறது.

2011ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின்போது ஐக்கிய அரபு நாடுகளோடு உடைந்துபோன உறவை மேம்படுத்துவதற்கு துனிசியா முயற்சித்து வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :