ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

வலுவிழந்தது டெம்பின் புயல்

படத்தின் காப்புரிமை EPA

தெற்கு வியட்நாமை அச்சுறுத்தி கொண்டிருந்த ஒரு வெப்பமண்டல புயல் வலுவற்று போனதால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுமையாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெம்பின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்கோவில் நடந்த பேருந்து விபத்தில் நான்கு பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் சென்றுக் கொண்டிருந்த ஒரு பேருந்து சாலையை விட்டு வெளியேறி ஒரு சுரங்கப்பாதை நுழைவு வாயிலில் நுழைந்ததில் நான்கு பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சமே தடைக்கு காரணம்

படத்தின் காப்புரிமை Reuters

துனிசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே நிலவி வரும் அசாதாரணமான சூழலுக்கு தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சமே காரணமென்று துனிசியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களில் பயணிப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து துனிசிய பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய போர்க்கப்பலுக்கு பாதுகாப்பு அளித்த இங்கிலாந்தின் போர்க்கப்பல்

படத்தின் காப்புரிமை PA

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் கடல் பகுதிக்கு அருகே வட கடல் வழியாக சென்ற ஒரு ரஷ்ய போர்க்கப்பலுக்கு ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பல் பாதுகாப்பு அளித்ததாக ராயல் கடற்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எவ்வித கருத்தையும் ரஷ்யா தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :