டிசம்பர் 31க்கு பின் எந்தெந்த ஃபோன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது?

இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிரபலமெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஒருசில இயங்கு தளங்களில் செயல்படப்போதில்லை.

படத்தின் காப்புரிமை STAN HONDA

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், 2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது.

கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை அளிக்கும் இயங்குளங்கள்தான் தற்போது விற்பனையாகும் செல்ஃபோன்களில் 99.5 சதவீதத்தில் உள்ளன. வாட்ஸ் ஆப் அறிமுகமான காலகட்டத்தில் 25 சதவீதத்துக்கும் குறைவான செல்ஃபோன்களில்தான் இவை இருந்தன.

ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கிய சிம்பியன் எஸ்60, ஆண்ட்ராய்ட் 2.1 மற்றும் 2.2 பதிப்புகள், விண்டோஸ் போன் 7, ஐபோன் 3ஜிஎஸ்/ஐஒஎஸ் 6 ஆகிய மொபைல் இயங்குதளங்களில் செயல்படும் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று கூறி அதற்கான கால அட்டவணையையும் அப்போது வாட்ஸ்ஆப் வெளியிட்டது.

இயங்குதளம் கால அட்டவணை
நோக்கிய சிம்பியன் எஸ்60 ஜூன் 30, 2017
பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 டிசம்பர் 31, 2017
விண்டோஸ் போன் 8.0 மற்றும் அதற்கு முந்தையவை டிசம்பர் 31, 2017
நோக்கிய எஸ்40 டிசம்பர் 31, 2018
ஆண்ட்ராய்ட் பதிப்புகள் 2.3.7 மற்றும் அதற்கு முந்தையவை பிப்ரவரி 1, 2020

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :