பருவநிலை அகதிகள்: சிரியா கிளர்ச்சிக்கும் வெப்பநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பு

மக்கா சோளம் படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பாவில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கும், உலகெங்கும் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை உயர்வதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஓர் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள 103 நாடுகளில் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை 20 டிகிரியிலிருந்து மாறுபடும்போது, அந்த நாடுகளை சேர்ந்த அதிக அளவிலான மக்கள் வேறு நாடுகளில் புகலிடம் தேடுகிறார்கள் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதே அளவில் வெப்பநிலை உயர்ந்தால், இந்த பகுதிகளிலிருந்தி வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6,60,000 என்ற அளவுக்கு உயரும்.

இந்த ஆய்வு முடிவு 'சயின்ஸ்' என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகி உள்ளது.

2000 - 2014 இடையிலான காலக்கட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3,50,000 என்ற அளவில் இருந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள்.

வானிலை அதிர்வுகள்:

இந்த ஆய்வில், வெப்பநிலை மாற்றத்தையும், அதனால் மக்கள் வேறு இடங்களில் குடிபெயர்வதையும் `வானிலை அதிர்வுகள்` என்று குறிப்பிடுகிறார்கள்.

மனித அளுமையில் இந்த வெப்பநிலை ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பாக அதிகமான வெப்பம், குறைந்த மகசூல் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை குறைக்கிறது, ஆவேச நடத்தைக்கு காரணமாகிறது என்கிறது இவ்வாய்வு.

இந்த ஆய்வின் தலைவரும் கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியர் வுல்ஃப்ராம் பிபிசியிடம்,"2000-2014 இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பியாவில் தஞ்சமடைய கோரிய விண்ணப்பத்திற்கும், பருவநிலைக்கு இயல்பான தொடர்பு உள்ளதை கண்டுபிடித்தோம்." என்கிறார்.

மேலும் அவர், "இந்த 103 நாடுகளில், சில நாடுகளின் பருவநிலை அதிர்ச்சியூட்டும் வெப்பமானதாகவும், சிலவற்றின் பருவநிலை அதிர்ச்சியூட்டும் குளிர்ச்சியானதாகவும் இருந்தது." என்கிறார்

உயரும் எண்ணிக்கை:

படத்தின் காப்புரிமை Getty Images

புவியின் வெப்பநிலை பருவநிலைக் காரணங்களால் உயர்வது, தொழில் மயத்துக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 1.8 டிகிரி உயர்ந்தால், ஆண்டுக்கு 28 சதவிகிதம் என்ற அளவில் ஐரோப்பாவில் தஞ்சமடைய கோருபவர்களின் எண்ணிக்கை உயரும். ஆனால், கார்பன் வெளியேற்றம் இப்போது உள்ள அளவில் தொடர்ந்து, வெப்ப நிலை 4.8 டிகிரி என்ற அளவுக்கு உயர்ந்தால் தஞ்சமடைய விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை 188 சதவிகிதம் உயரும். அதாவது, ஆண்டுக்கு 6,60,000 பேர் புகலிடம் கோருவார்கள்.

உயரும் வெப்பத்தினல் ஐரோப்பாவில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்ற கணக்கு விகிதத்தில் பேராசிரியர் வுல்ஃப்ராம் உறுதியாக இல்லை.

இதற்கு அவர் சொல்லும் காரணம், நாம் இந்த வெப்பநிலைக்கு பழகிக் கொள்ள தொடங்கலாம் என்பதுதான். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் அதிர்ச்சி ஏற்படுமானால், நிலைமை மோசமாகும் என்கிறார் அவர்.

சிரியா கிளர்ச்சியும், வெப்பநிலையும்:

2015-ம் ஆண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வு, சிரியா நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பை வெளிகொணர்ந்தது, பருவநிலை மாற்றம் சிரியாவை மோசமான வறட்சியில் தள்ளியது. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சிக்கு அது ஒரு முக்கிய காரணி என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வை செய்த ஆய்வாளர்கள், வெப்பநிலைக்கும் புகலிடம் தேடுபவர்களுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் இந்த புதிய ஆய்வு முக்கித்துவம் வாய்ந்த ஒன்று என்று கூறி உள்ளார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :