ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம்

பழைய ஜெருசலேம் நகரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையை தோண்டி, யூதர்களுக்கான புகழ்பெற்ற ஆலயத்துக்கு அருகில் அமையவுள்ள ரயில் நிலையத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயரை சூட்ட இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

லைபீரியா அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தீவிரம்

லைபீரியாவில் நடந்து முடிந்த அந்நாட்டு அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துணை ஜனாதிபதி ஜோசஃப் பொகாய் மற்றும் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் ஜார்ஜ் வியா ஆகியோர் இதில்போட்டியிடுகின்றனர்.

உக்ரைன் நெருக்கடி: நூற்றுக்கணக்கான சிறை கைதிகள் பரிமாற்றம்

உக்ரைன் மற்றும் அந்நாட்டின் கிழக்கின் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் ஆகிய இருதரப்பினரும் நூற்றுக்கணக்கான சிறை கைதிகளை பரிமாற்றிக்கொண்டனர். 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்ததால் உண்டான மோதல்களையடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய பரிமாற்றத்தில் இதுவும் ஒன்று.

ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: சுமார் 10 பேர் படுகாயம்

ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். IED எனப்படும் மேம்பட்ட வெடிக்கும் சாதனம் வெடித்ததில் மேலும் ஒரு நபர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :