இரான்: வன்முறையாக மாறிய மூன்றாவது நாள் போராட்டம்

  • 31 டிசம்பர் 2017
போராட்டம் படத்தின் காப்புரிமை EPA

இரானில் சில நகரங்களில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறையாக மாறி வருவதைக் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.

இரானில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், "சட்டவிரோதக் கூட்டங்களை" தவிர்க்க வேண்டும் என இரான் உள்துறை அமைச்சர் எச்சரித்ததையும் போராட்டக்காரர்கள் புறந்தள்ளியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளி, துப்பாக்கிச்சூடால் காயமடைந்த இருவர் உயிரிழந்ததாக கூறுகிறது.

அதே போல, போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைப்பதும், அரசு அலுவலகங்களை தாக்குவதுமான காணொளிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

குறையும் வாழ்க்கை தரும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமையன்று மஷாத் என்ற இடத்தில் தொடங்கிய போராட்டங்கள், பின்னர் பல நகரங்களுக்கு பரவின.

வன்முறை வெடித்ததற்க்குக் காரணம், வெளிநாட்டு சக்திகளின் சதி என இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்