எதைநோக்கி செல்கிறது இரான் போராட்டம்?

  • 3 ஜனவரி 2018
அமெரிக்கா: இரானின் குற்றச்சாட்டுகள் `அர்த்தமற்றவை` படத்தின் காப்புரிமை AFP

சமீபத்திய போராட்டங்களில் பின்னால், வெளிநாட்டவர்கள் இருந்து செயல்படுவதாக, இரான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை `அர்த்தமற்றது` என்று அமெரிக்கா முத்திரை குத்தியுள்ளது.

இரான் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, போராட்டங்கள் குறித்த தனது முதல் கருத்தில் இதை கூறியிருந்தார்.

ஐ.நா சபைக்கான அமெரிக்க பிரதிநிதியான நிக்கி ஹேலி, இந்த போராட்டங்கள், `தன்னிச்சையானது` என்று கூறினார். மேலும், அங்கு நிலவும் சூழல் குறித்து பேச, ஐ.நா சபையின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முதல் நடந்துவரும் இந்த போராட்டத்தில், இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

எதைநோக்கி செல்கிறது போராட்டம்? - ஜெர்மி போவன், மத்திய கிழக்குப்பகுதி ஆசிரியர், பிபிசி

கடந்த வியாழக்கிழமை, இந்த போராட்டம் தொடங்கியபோது, நாட்டின் பொருளாதார நிலை குறித்த ஒரு போராட்டமாகவே இருந்தது. ஆனால், இது விரிவடைந்து, கோபங்கள் அதிகமான நிலையில், அவை அரசியலை ஒரு முக்கிய விஷயமாக எடுத்துகொண்டன.

அதிபர் மீது பரவலாக விமர்சனம் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, தடைகள், ஊழல் மற்றும் திறமையற்ற மேலாண்மை திறன் கொண்ட இரானின் பொருளாதாரத்தில், நல்ல மாற்றம் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்து, அவருக்கு வாக்களித்தவர்களை, அதிபர் ஏமாற்றத்தில் ஆழ்த்தினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்சனைகளில் இரானின் பங்கு குறித்தும் விமர்சிக்கப்பட்டது. நாட்டு வறுமையில் விழுந்துகொண்டு இருந்த நிலையில், அந்நாடு கொண்டு வந்திருந்த வெளியுறவுக் கொள்கை மிகவும், விலை உயர்ந்ததாக இருந்தது.

நாட்டின் அதி உயர் அதிகாரியான அயத்துல்லா கமேனி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டவர்களே காரணம் என்று அவர் பதிலளித்தார். கடந்த காலங்களில், வெளிநாட்டு தலையீடுகளால், இரான் அவதிப்பட்டுள்ளது. அதனால், அவரின் வார்த்தைகள் சிலரை குறிப்பிடும் வகையில் இருக்கலாம். மேலும், பாதுகாப்பு படையினரிடமிருந்து இதற்கான பதில் என்பது, மிகவும் கடினமாகவும் வரலாம்.

2009 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடந்த போராட்டம் போல இல்லாமல், இந்த போராட்டத்தில் குறிப்பிடும் வகையிலான தலைமை என்று யாரும் இல்லை.

அந்த காலத்தில், நாட்டின் பெரும் செல்வந்தர்கள் பிளவுபட்டனர். இது அத்தகைய தருணமல்ல, அதனால், இந்த போராட்டம் தொடர்வது என்பது கடினமான ஒரு விஷயமாகிறது.

ஆனால், இந்த போராட்டம் நடக்கிறது என்பதே மிகப்பெரிய விஷயம். இரானில் பல ஆண்டுகளாக நிலவும், அடக்குமுறை, வறுமையால், மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்