ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

எதிரிகளின் சதி

படத்தின் காப்புரிமை EPA

இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, "இஸ்லாமியக் குடியரசில் (இரானில்) பிரச்சனைகளை உருவாக்க பணம், ஆயுதங்கள், அரசியல் மற்றும் உளவு உள்ளிட்ட பல கருவிகளை எதிரிகள் பயன்படுத்தியுள்ளனர்." என்று கூறி இருந்தார். இதை `அர்த்தமற்றது` என்று வர்ணித்துள்ளது அமெரிக்கா. ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர், இந்த போராட்டங்கள் எல்லாம் தன்னிச்சையானது என்று கூறியுள்ளார். மேலும், இந்த போராட்டங்கள் தொடர்பாக ஐ.நா வில் அவசர கூட்டத்தை கூட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

பெரும்புயல்

படத்தின் காப்புரிமை Michael Scott

மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வீசலாம் என்று கணிக்கப்பட்டுள்ள எல்லினோர் புயல் உயிர்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடும் என்று பிரிட்டன் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலின் ஆபத்து அளவு அதிகரித்து உள்ளதால், இங்கிலாந்து, வட ஐயர்லாந்து மற்றும் தென் மேற்கு ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகள் இப்புயலால் பாதிப்புக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஆஃப்ரிக்கா குடியேறிகள்

படத்தின் காப்புரிமை AFP

ஆஃப்ரிக்க குடியேறிகள் தங்கள் நாட்டைவிட்டு உடனே வெளியேற வேண்டும் இல்லையெனில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று இஸ்ரேல் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் இஸ்ரேலைவிட்டு வெளியேற, குடியேறிகளுக்கு 3500 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்படும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கோ செல்ல வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் வெளியேறவில்லை என்றால், ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

மன்னிப்பு

படத்தின் காப்புரிமை Youtube/ Logan Paul

தற்கொலை செய்வதற்காக அதிகமான ஜப்பானியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆஒக்கிகாஹரா பகுதிக்கு சென்ற பிரபலமான யூ-டியூப் பதிவரான லோகம் பாலும் அவரது நண்பர்களும், அங்கு தற்கொலைசெய்துக் கொண்ட ஒருவரின் சடலத்தை படப்பதிவு செய்து யு-டியூபில் வெளியிட்டனர். இது கடுமையான கண்டனத்தை சந்தித்ததை அடுத்து, லோகன் பால் தனது ட்விட்டர் கனக்கில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். தான் செய்த செயலை தவறு என்று ஒப்புக் கொண்டுள்ள அவர், இனி இது போல நிகழாது என்று பதிவிட்டுள்ளார்.

36 பேர் பலி

படத்தின் காப்புரிமை EPA

பெருவில் ஒரு பேருந்து விபத்தில் 36 பேர் பலி ஆகி உள்ளனர். கடற்கரை அருகே உள்ள மலை சிகரத்தில் 50 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இந்த பேருந்து 330 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து விழுந்தது. அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், அந்த சாலை `பிசாசு வளைவு` என்று பொதுவாக அறியப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :