ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 4 ஜனவரி 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

வன்முறைக்கு காரணம் குடியேறிகள்?

படத்தின் காப்புரிமை Reuters

நாட்டில் உயர்ந்து வரும் வன்முறை குற்ற செயல்களுக்கு குடியேறிகள் காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மனி அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது. வட மேற்கு ஜெர்மனியில் உள்ள லோயர் சாக்ஸோனி மாநிலத்தில் நடந்த குற்ற செயல்கள் குறித்த தரவுகளை ஆய்வு செய்ததில் அந்தப் பகுதியில் மட்டும் 90 சதவிகித குற்ற செயல்கள் உயர்வுக்கு காரணம் இளம் ஆண் குடியேறிகள் என்கிறது அந்த ஆய்வு.

அறிவை இழந்துவிட்டார்

படத்தின் காப்புரிமை Reuters

வெள்ளை மாளிகை வேலை பறிபோனதும் என் முன்னாள் உதவியாளர் அறிவை இழந்துவிட்டார் என்று டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்பிடம் பணி புரிந்த ஸ்டீவ் பென்னான், சமீபத்தில் வெளி வந்த `Fire and Fury: Inside the Trump House` என்ற புத்தகத்தில் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கி இருந்தார். அந்தப் புத்தகத்தில் டிரம்பின் மகனும், ஒரு ரஷ்யா குழுவும் சந்தித்த நிகழ்வை ஒரு `தேச துரோக` செயல் என்று விவரித்து இருந்தார். இதனால் கோபமடைந்த டிரம்ப், "பென்னான் வேலையை மட்டுமல்ல, அறிவையும் சேர்த்து இழந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.

கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது

படத்தின் காப்புரிமை Reuters

இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இரானில் நிலவிவந்த அமைதியற்ற நிலையை எதிர்கொள்வதற்காக அரசுக்கு ஆதரவான பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதன்கிழமையன்று, பத்தாயிரக்கணக்கானோர் நாடெங்கும் அரசுக்கு ஆதரவான பேரணிகளில் ஈடுபட்ட நிலையில், ஜஃபாரியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

புரட்டிப் போட்ட புயல்

படத்தின் காப்புரிமை EPA

வட ஐரோப்பியாவில் வீசய எலினோர் புயல், அந்த பகுதிக்கு பெரும் சேதத்தை விளைவித்து சென்றுள்ளது. இந்த புயலினால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முதலில் பிரிட்டனை தாக்கிய இந்த புயல், பின் வட ஐரோப்பியாவை நோக்கி நகர்ந்தது. இந்த புயலின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சம் பாய்ச்சிய ஆய்வு

படத்தின் காப்புரிமை ERIC.S.CARLSON ILLUSTRATION

2013 ஆம் ஆண்டு அப்வெர்ட் சன் ரிவர் தொல்லியல் தல ஆய்வின் போது ஒரு குழந்தையின் கூடு கண்டெடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்ததில், அந்த கூடானது 11, 500 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு பல புதிர்களுக்கு விடை அளிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :