அமெரிக்கா: வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்

  • 5 ஜனவரி 2018

பொதுவாக இரட்டையர்களின் பிறந்தநாள் ஒரே ஆண்டிலேயே வரும். ஆனால் அமெரிக்காவில் பிறந்த இந்த இரட்டையர்கள் வெவ்வேறு ஆண்டில் பிறந்தவர்கள் என்றால் வியப்பாக இருக்கிறதா?

படத்தின் காப்புரிமை Kristen Powers/ KBAK/KBFX Eyewitness News

ஜோகுயின் ஜூனியர் மற்றும் ஐடானா டி ஜீசஸ் இருவரும் அழகான அதிசயமான இரட்டைப் பிறவிகள்!

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோகுயின் ஜூனியர் 2017 டிசம்பர் 31ஆம் தேதி 11.58க்கு பிறந்தார். அதற்கு இருபது நிமிடங்களுக்கு பிறகு அவரது சகோதரி ஐடானா டி ஜீசஸ் 2018 ஜனவரி முதல் நாளன்று பிறந்தார்.

"இது வழக்கத்திற்கு மாறானது" என்று கூறுகிறார் இந்த பிரசவத்தை பார்த்த மருத்துவர் சையத் தம்ஜிதி. "35 ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்திருக்கும் நான் முதல்முறையாக இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டையர்கள் பிறந்ததை பார்த்தேன்" என்று ஆச்சரியப்படுகிறார்.

ஜனவரி 27ஆம் தேதியன்று குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் உத்தேசமாக கூறியிருந்த நிலையில், தாய் மரியாவுக்கு புத்தாண்டில் எதிர்பாராத பரிசு கிடைத்திருக்கிறது.

இந்த மருத்துவமனையில் 2018இல் பிறந்த முதல் குழந்தை ஐடானா டி ஜீசஸ் என்பதால், இந்தக் குழந்தை பிறந்தவுடனே பரிசையும் வென்றிருக்கிறது!

ஆம், தங்கள் மருத்துவமனையில் புத்தாண்டில் முதலில் பிறக்கும் குழந்தைக்கு 3000 டாலர் பரிசுத்தொகை கொடுக்கும் மருத்துவமனையின் வழக்கப்படி, ஐடானா பிறந்ததுமே பரிசுத்தொகையை பெற்றுள்ளார். இரட்டை குழந்தைகளாக இருப்பதால் பரிசுத்தொகை இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்தே வழங்கப்படுகிறது.

வழக்கமாக இரட்டைக் குழந்தைகளுக்குள் வரும் சண்டையில், யார் மூத்தவர் என்ற வாக்குவாதம் வலுக்கும். இந்த இரட்டையர்களிடையே அப்படி வாக்குவாதம் வந்தால் நான் உன்னைவிட ஒரு வருடம் மூத்தவன் என்று சகோதரியிடம் ஜோகுயின் சொல்வாரா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஒரே கணவரை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்